Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்தி பழிதீர்த்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

கட்டாக்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வென்று முந்தைய தோல்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பழிதீர்த்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய கேட்டுக் கொண்டார்.

ஷேவாக் அமர்க்களம்

ஷேவாக் அமர்க்களம்

ஷேவாக்கும், மன்தீப்சிங்கும் பஞ்சாப்பின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். காலிஸ் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை ஷேவாக் அமர்க்களமாக தொடங்கி வைத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷேவாக் நிலைத்து நின்று விளையாடினார்.

சோபிக்காத மேக்ஸ்வெல், மில்லர்

சோபிக்காத மேக்ஸ்வெல், மில்லர்

அதிரடியாக 90 ரன்களைக் குவித்துவிடும் மேக்ஸ்வெல் இம்முறை 14 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து அவுட் ஆனார். அதேபோல் டேவிட் மில்லரும் 13 ரன்களிலேயே கிளீன் போல்டு ஆனார்.

17 போட்டிக்குப் பின் அரைசதம்

17 போட்டிக்குப் பின் அரைசதம்

ஆனாலும் தனிநபராக போராடிய ஷேவாக், இந்த தொடரில் முதல் அரைசதத்தை எட்டினார். 17 ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு பிறகு அவர் பெற்ற முதல் அரைசதம் இதுவாகும். இறுதியில் அவர் 72 ரன்களில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் இறங்கி வந்து அடிக்க முயன்ற போது ஸ்டம்பை பறிகொடுத்தார்.

149 ரன்கள்

149 ரன்கள்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.

அட்டகாசம் காட்டிய காம்பீர்- உத்தப்பா ஜோடி

அட்டகாசம் காட்டிய காம்பீர்- உத்தப்பா ஜோடி

அடுத்து 150 ரன்கள் இலக்கை நோக்கி ராபின் உத்தப்பாவும், கேப்டன் கவுதம் காம்பீரும் கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கினர். சந்தீப்ஷர்மாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டிய உத்தப்பா, மிட்செல் ஜான்சனின் ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்து கலங்கடித்தார்.

உத்தப்பா 46 ரன்கள்

உத்தப்பா 46 ரன்கள்

ராபின் உத்தப்பா 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கவுதம் காம்பீருடன், மனிஷ் பாண்டே இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அந்த அணியை வெல்ல வைத்தனர்.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பீர் 63 ரன்களுடனும் பாண்டே 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4–வது வெற்றி

4–வது வெற்றி

நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை, கொல்கத்தா வீரர்கள் சாய்த்துவிட்டனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப்புக்கு இது 2-வது தோல்வியாகும். அதே சமயம் 9-வது ஆட்டத்தில் இறங்கிய கொல்கத்தாவுக்கு இது 4-வது வெற்றியாகும்.

பழிவாங்கியது கொல்கத்தா

பழிவாங்கியது கொல்கத்தா

ஏற்கனவே 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி மூலம் கொல்கத்தா பழிதீர்த்துக் கொண்டது.

Story first published: Monday, May 12, 2014, 8:54 [IST]
Other articles published on May 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+