Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தீராக் காதல்.. பார்வையிலேயே பளிச்சென பாடம் நடத்தும் விராட் கோலி!

டெல்லி: இது தீராக் காதல்தான் போல.. இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் குவாரன்டைன் பீரியடை படு உற்சாகமாக கழித்துக் கொண்டு வருகின்றனர்.

Recommended Video

When ‘elder brother’ Kumble helped Saqlain Mushtaq

எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பரவலாக இருக்கிறது. இன்னும் பரவல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து அதி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என்ற போதிலும் இன்னும் முழு இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனால் அனைவருமே லாக் டவுன் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதுபோலவே விராட் கோலியும் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீட்டோடு இருக்கிறார்.

இருவரும் வீடியோ

இருவரும் வீடியோ

இருவரும் அவ்வப்போது ஏதாவது செய்து அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டுக் கொண்டுள்ளனர். இவை அனைத்துமே வைரலாகி வருகின்றன. தனது வீட்டினருடன் செலவிடும் நேரத்தையும், விராட் கோலியுடன் செலவிடும் நேரத்தையும் பெரும் பொக்கிஷமாக கருதுகிறார் அனுஷ்கா சர்மா. காரணம் இப்படிப்பட்ட ஒறு பிரேக் இப்போதைக்கு யாருக்குமே கிடைக்காது என்பதால்.

 ஹேர்கட் செய்த அனுஷ்கா சர்மா

ஹேர்கட் செய்த அனுஷ்கா சர்மா

சமீபத்தில் விராட் கோலியை உட்கார வைத்து அவருக்கு அழகாக ஷேவ் செய்து ,முடி வெட்டி அழகு பார்த்தார் அனுஷ்கா சர்மா. அதேபோல தனது குடும்பத்தினருடன் விளையாடும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது விராட் கோலி ஒரு படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மட்டுமல்லாமல் அவர்களது செல்ல நாயும் இடம் பெற்றுள்ளது.

கவிதையாக ஒரு போட்டோ

கவிதையாக ஒரு போட்டோ

விராட் கோலியின் டிவிட்டரில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படம் ஒரு கவிதை போல உள்ளது. அதாவது தரையில் விராட் கோலி படுத்திருக்கிறார். அருகே அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு நடுவே அவர்களின் செல்ல நாய். அனுஷ்கா சர்மா நாயைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறார். அதை வாஞ்சையுடன் அணைத்துள்ளார். விராட் கோலியின் வலது கையும் நாயை அணைத்தபடி உள்ளது. ஆனால் அவரது பார்வைதான் இங்கு ஹைலைட்.

காதல் பார்வை

மனைவியை அப்படி ஒரு காதல் பார்வை பார்க்கிறார் விராட் கோலி. அதில் காதலும் பாசமும், அன்பும் அப்படி வழிந்தோடுகிறது. பின்னணியில் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி.. நமைச் சேர்த்த இரவுக்கு நன்றி என்று பாட்டு மட்டும்தான் பாடலை. அப்படி ஒரு ரொமான்டிக் லுக்காக இருக்கிறது கோலியின் அந்த வாஞ்சையான பார்வை. அழகான போட்டோ மட்டுமல்ல.. அருமையான சூழலும் கூட. இப்போது இது வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, April 14, 2020, 0:50 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+