Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண பாக்கி வைத்த கொச்சி டஸ்கர்ஸ் அணி ஐபிஎல்லிலிருந்து சஸ்பெண்ட்

மும்பை: பண பாக்கி வைத்ததற்காக ஐ.பி.எல்.லிலிருந்து கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

ஐ.பி.எல். அணியை வாங்கும் அணி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கிரிக்கெட் வாரியத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். கடந்தாண்டு அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் அணி ரூ. 1,550 கோடிக்கு வாங்கப்பட்டது.

அந்த அணி 10 ஆண்டு உத்தரவாத தொகையாக 156 கோடி ரூபாயை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். ஆனால் கொச்சி அணி தங்களது உத்தரவாத தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் கொச்சி அணிக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதற்குப் பலன் ஏதும் இல்லை. இதையடுத்து கொச்சி அணி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

Story first published: Thursday, May 31, 2012, 16:35 [IST]
Other articles published on May 31, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+