Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்கதான் முக்கிய காரணம்..சுந்தர் & நதீம் மீது கோபத்தை காட்டிய கோலி.. பேட்டியில் ஷாக் குற்றச்சாட்டு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வியை தொடர்ந்து வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் நதீம் பவுலிங்கை கோலி குறை கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. 5 நாள் ஆட்டம் முழுக்க இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 227 ரன்களை வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இந்த தோல்வி தொடர்பாக கோலி அளித்த பேட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி மீது நாங்கள் அதிகம் பிரஷர் கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக எங்கள் பவுலிங் படை சரியாக செயல்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

கோலி

கோலி

அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்தார். முதல் இன்னிங்சில் நன்றாகவே இருந்தோம். ரன் செல்வதை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நாங்கள் அதிகம் பிரஷர் போட்டு இருக்கலாம்.

கருத்து

கருத்து

எங்கள் அணியில் நான்காவது மற்றும் ஐந்தாவது பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.எதிர்பார்த்த அளவிற்கு அவர்கள் பவுலிங் செய்யவில்லை. பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட் முன்னுக்கு வந்து இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். சில பவுலர்கள் எதிரணிக்கு பிரஷர் கொடுக்கவில்லை. ஆனால் அது பரவயில்லை. சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் நன்றாகவே பவுலிங் செய்தோம், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

நதீம்

நதீம்

நதீம் மற்றும் சுந்தர் இருவரையும் கோலி குற்றஞ்சாட்டி இருக்கிறார். இவர்கள்தான் 4 மற்றும் 5வது பவுலர்கள். இவர்களின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கோலி பெயரை குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Story first published: Tuesday, February 9, 2021, 14:57 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+