Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது உனக்கு கடைசி வாய்ப்பு; பிடிச்சுக்கோ".. ஜுனியர்கள் முன்பு.. முகத்துக்கு நேரே "எச்சரித்த" கோலி

லண்டன்: இந்திய அணியின் முக்கிய வீரரை அழைத்து, இங்கிலாந்து தொடர் குறித்து விவாதித்த போது, சற்று எச்சரிக்கை செய்திருக்கிறார் கேப்டன் கோலி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி, மனதளவில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்துவிட்டது. எந்தவித சவாலும் இன்றி சரண்டரானது தான் சோகம்.

அதிகம் எதிர்பார்த்த வீரர்கள் புஸ்ஸென ஏமாற்றியதால், கோலி உட்பட இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகமும் பெரும் அப்செட். இந்த நிலையில் தான் இங்கிலாந்து தொடரை எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி.

 புஜாராவுக்கு பதிலாக

புஜாராவுக்கு பதிலாக

இந்த சூழலில், அணியில் ஒரு மிக முக்கிய மாற்றமாக, மிடில் ஆர்டரில் கோலோச்சி வந்த புஜாராவுக்கு முதல் போட்டியில் கல்தா கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்பே செய்திகள் வெளியாகின. இதில், ஓரளவுக்கு உண்மையும் இருக்கவே செய்கிறது. WTC ஃபைனலில் புஜாராவின் ஆட்டத்தில் துளிகூட Intent இல்லை என்பதே அவர் மீது வைக்கப்படும் முதன்மையான விமர்சனம். இதனால் தான் அவருக்கு ஓய்வு கொடுக்க கேப்டன் கோலி விரும்புவதாக தெரிகிறது.

 முயற்சி செய்து பார்ப்போம்

முயற்சி செய்து பார்ப்போம்

இந்நிலையில், புஜாராவை நீக்கும் பட்சத்தில் அந்த இடத்திற்கு லோகேஷ் ராகுலை களமிறக்க கேப்டன் கோலி, கோச் ரவி சாஸ்திரி ஆகியோர் சேர்ந்தே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், ராகுலோ ஓப்பனிங் வீரர். இவரை மிடில் ஆர்டரில் இறக்கினால் ஒர்க் அவுட் ஆகுமா? என்று கோச் சாஸ்திரி கேள்வி எழுப்பிய போது, அதற்கு 'முயற்சி செய்து பார்ப்போம்' என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார் கோலி.

 கோலி கண்டிப்பு

கோலி கண்டிப்பு

இந்த முடிவுக்கு சில பிசிசிஐ நிர்வாகிகள் கூட எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றனர். ராகுலை ஓப்பனிங் ஸ்லாட்டுக்கான மாற்று வீரராகத் தான் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், புஜாராவின் மோசமான ஃபார்மை கருத்தில் கொண்டு, இந்த முடிவை துணிந்து கோலி எடுத்திருப்பதாக தெரிகிறது. எனினும். போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் முழுமையாக இருப்பதால் இப்போதைக்கு இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டும் என்று கோலி கண்டிப்புடன் கூறியிருக்கிறாராம்.

 பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

அதேசமயம், லோகேஷ் ராகுலிடம் இதுகுறித்து தெளிவாக கோலி எடுத்துரைக்கிறார் என்று தெரிகிறது. அதில், "உனக்கான வாய்ப்பு இது. கடைசி வாய்ப்பு என்றும் வைத்துக் கொள்ளலாம். டெஸ்ட் போட்டிகளில் உன்னை நிரூபித்து விடு" என்று கோலி வார்னிங் கலந்த அட்வைஸ் சொல்லி இருக்கிறாராம். என்ன நடக்கப் போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அந்த மீட்டிங்கில், இளம் வீரர்கள் பலரும் உடனிருக்க, அவர்கள் முன்பே கோலி இதனை சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.

Story first published: Saturday, July 10, 2021, 21:07 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+