
18வது சதம்
இன்று கோஹ்லி போட்ட சதம் அவருக்கு 18வது ஒரு நாள் சதமாகும்.

126வது போட்டி
மேலும் இது கோஹ்லிக்கு 126வது ஒரு நாள் போட்டியாகும்.

கம்பீ்ர் சாதனையைக் கடந்தார்
இன்றைய போட்டியில் எடுத்த ரன்களைச் சேர்த்து மொத்தம் 5238 ரன்களைத் தொட்டுள்ளார் கோஹ்லி. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் கம்பீர் எடுத்த ரன்களை அவர் தாண்டியுள்ளார்.

டோணி்க்கு 300வது 'டிஸ்மிஸ்ஸல்'
கேப்டன் டோணி, ஒரு விக்கெட் கீப்பராக இன்று தனது 300வது டிஸ்மிஸ்ஸலை நிகழ்த்தினார். இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் 300 பேரை வீழ்த்த காரணமாக அமைந்த நிகழ்வு இதுவே முதல் முறையாகும்.

ஜாம்பவான்கள் 'கிளப்'பில் டோணி
இதன் மூலம் 472 டிஸ்மிஸ்ஸல்களுடன் முதலிடத்தில் உள்ள கில்கிறைஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்காரா, தென் ஆப்பிரிக்காவின் மார்க் பெளச்சர் ஆகியோரது வரிசையில் டோணியும் இணைந்துள்ளார்.

220 கேட்ச் - 79 ஸ்டம்பிங்
300 டிஸ்மிஸ்ஸல்களில் 220 கேட்ச் மற்றும் 79 ஸ்டம்பிங் அடக்கமாகும். தற்போது மொத்தம் 301 டிஸ்மிஸ்ஸல்களை வைத்துள்ளார் டோணி. இது அவருக்கு 239வது போட்டியாகும்.


Click it and Unblock the Notifications