நல்லா கவனிங்க.. ஏதோ சரியில்லை.. 5 இன்னிங்சிலும் நடந்த அந்த சம்பவம்.. இந்திய அணிக்குள் பரபரப்பு!
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலியும் மூத்த வீரர் ரோஹித் சர்மாவும் களத்தில் பெரிய அளவில் பேசிக்கொள்ளாமல் இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை இந்திய அணி 112 ரன்களுக்கு சுருட்டி உள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்களை குவித்து இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலியும் மூத்த வீரர் ரோஹித் சர்மாவும் களத்தில் பெரிய அளவில் பேசிக்கொள்ளாமல் இருப்பது சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்தே இந்த சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது.

ரோஹித்
ரோஹித் பேட்டிங் செய்தால் கோலி அவுட்டாகி விடுகிறார். கோலி பேட்டிங் செய்தால் ரோஹித் அவுட்டாகிவிடுகிறார். இரண்டு வீரர்களும் ஒரு செஷன் கூட முழுதாக பேட்டிங் செய்வது இல்லை. இரண்டு பேரும் ஒரு செஷன் கூட முழுக்க பார்ட்னர்ஷிப் இதுவரை அமைக்கவில்லை.

பேட்டிங்
அதோடு இவர்கள் இருவரும் பேட்டிங் செய்யும் போது பெரிதாக பேசிக்கொள்வதும் இல்லை. இடைவேளையில் இவர்கள் பெரிதாக ஆலோசனைகள் செய்வது இல்லை. ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

நெருக்கம்
ஆனால் இப்போது அந்த நெருக்கம் களத்தில் காணாமல் போய்விட்டது. ரெண்டு பேரும் ஒரே டீம்ல இருக்கோம். அவ்வளவுதான். அதை தவிர நமக்கு இடையில் எதுவும் இல்லை என்பது போலத்தான் இரண்டு பேருமே களத்தில் ஆடுகிறார்கள். கடந்த 2 போட்டி நேற்று ஒரு இன்னிங்ஸ் என்று மொத்தம் 5 இன்னிங்சிலும் இவர்கள் இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

முக்கியம்
இந்திய அணியின் இரண்டு முக்கியமான வீரர்களுக்கு இடையே இப்படி இருக்கும் புகைச்சல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் இருவரும் மீண்டும் பழையபடி பேசுவார்களா, பிசிசிஐ இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications