Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காத்திருக்கும் கசப்பான நிமிடங்கள்.. எதிர் எதிரே வரும் 2 துருவங்கள்.. சென்னையில் என்ன நடக்குமோ!?

சென்னை: சென்னையில் நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கோலி இருவரும் சந்தித்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கோலிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையில் மோதல் நிலவி வருவதாக பல காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த 2019 உலகக் கோப்பையின் போது இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்தது.

இந்திய அணியின் கேப்டனாக கோலி தொடரலாமா அல்லது ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமா என்று எழுந்த விவாதம் இதை பெரிதாக்கியது. கடந்த ஒன்றரை வருடமாக இந்த மோதல் கனலாக தீ பிடித்துக் கொண்டு இருக்கிறது.

மோதல்

மோதல்

இந்த மோதல் பெரிதாகவே ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமாக இருக்கும் வீரர்களை கோலி புறக்கணிக்க தொடங்கினார்.சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கோலி கொஞ்சம் கொஞ்சமாக மறுப்பு தெரிவித்தார். அதோடு ரோஹித் சர்மாவிற்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் காயம் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலிய வரவில்லை என்றே தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் குறித்து தெரியவில்லை என்று கோலி பட்டும்படாமல் பேசியது எல்லாம் பெரிய சர்ச்சையானது. கோலி மொத்தமாக ரோஹித் சர்மாவை புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறாரோ என்றும் கேள்விகள் எழுந்தது.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இதனால் இரண்டு பேருக்கும் இடையில் வீடியோ கால் போட்டு சமாதானம் செய்யும் அளவிற்கு சண்டை சென்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு ரோஹித் சர்மா வருவதற்கு முன் குழந்தை பிறப்பை காரணம் காட்டி கோலி இந்தியா திரும்பிவிட்டார். இதனால் கடந்த ஒன்றரை வருடமாக இவர்கள் இருவரும் ட்ரெஸ்ஸிங் ரூமில் சந்தித்துக்கொள்வே இல்லை.

சந்திக்கவில்லை

சந்திக்கவில்லை

இந்த நிலையில் வரும் இங்கிலாந்து தொடரில்தான் இவர்கள் சந்திக்க போகிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து சென்னையில் இவர்கள் பயிற்சி மேற்கொள்ள போகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்களுக்கு இடையிலான நட்பு தொடருமா, தங்களுக்கு இடையிலான கசப்பான நிமிடத்தை எப்படி கடப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது .

Story first published: Tuesday, January 26, 2021, 18:03 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+