4 நாளில் டெஸ்ட் முடிஞ்சிடுச்சி..! 5வது நாள் கோலி, மனைவியுடன் பண்ணின காரியத்தை பாருங்க.. வைரல்!
Recommended Video
ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை மனைவி மற்ற வீரர்களுடன் ஜாலியாக கடற்கரையில் படகு சவாரி செய்து கொண்டாடினார்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முன்னதாக, 3 டி 20 போட்டிகளை 3க்கு 0 என்ற கணக்கில் வென்றது.
பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 2க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டி மழையால் தடைபட்டது. தற்போது தொடங்கியுள்ள டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

கோலி சாதனை
இந்த வெற்றியின் மூலம் அந்நிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோலி தலைமையிலான இந்திய அணி என்று பெயர் வாங்கியிருக்கிறது. தோனியின் சாதனையையும் குறைந்த போட்டிகள் மூலம் கோலி சமன் செய்து அசத்தியிருக்கிறார். அதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
ஜாலியான நாள்
இந்த வரலாற்று வெற்றியை மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அணி வீரர்களுடன் கரீபிய தீவில் கேப்டன் கோலி ஜாலியாக கொண்டாடி உள்ளார். அது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை இளம் வீரர் கே.எல்.ராகுல் தமது டுவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும பகிர்ந்துள்ளார். ராகுலுடன் மயங்க் அகர்வால், அஸ்வின் ஆகியோரும் உள்ளனர்.
அசத்தல்
இந்த பதிவுக்கு அஸ்வின் பதில் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கடல் மற்றும் சூரிய அஸ்தமனம் அசத்தல் காம்பினேஷன் என்று குறிப்பிட்டுள்ளார். சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஆன்டிகுவா கடற்கரையில் ஜடேஜாவுடன் ஜெட் ஸ்கை சவாரி செய்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.
30ம் தேதி 2வது போட்டி
சர்வதேச டெஸ்ட் அரங்கில் இப்போது இந்தியா தான் நம்பர் 1 அணி. ஐசிசி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியுடன் துவக்கி இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி ஜமைக்காவில் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications