Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேட்சுக்கு வருவீங்களா?.. கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டு ஹனிமூன் கொண்டாடும் கோஹ்லி

கேப் டவுன்: இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. இந்த வருடத்தின் மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது.

முதல் போட்டி ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரை பொறுத்தே வெளிநாட்டில் இந்திய அணியின் திறமை என்ன என்று கண்டுபிடிக்க முடியும்.

இந்த நிலையில் கோஹ்லி பயிற்சி செய்யாமல் ஹனி மூன் கொண்டாடிக் கொண்டு இருப்பதாக பேசப்படுகிறது. அனுஷ்கா சர்மாவுடன் அவர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஹனிமூன்

ஹனிமூன்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருந்தாலும் கோஹ்லி அங்கு ஹனி மூன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. கோஹ்லிக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் ஆன பின் அவர் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் இதை பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் கோஹ்லி அதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.

நோ பயிற்சி

நோ பயிற்சி

ஏற்கனவே கோஹ்லி திருமண வரவேற்பு காரணமாக பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பின் தென்னாப்பிரிக்காவில் பெய்யும் மழை காரணமாக வீரர்கள் பயிற்சி செய்ய முடியாமல் போனது. பல இக்கட்டான சூழ்நிலைக்கு இடையில் வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

புகைப்படம்

ஆனால் கிடைக்கும் நேரத்தில் கூட கிரிக்கெட் பயிற்சி செய்யாமல் கோஹ்லி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் அனுஷ்கா சர்மாவுடன் எடுத்து இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. போட்டிக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் கோஹ்லியின் இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

என்ன ஆட்டம்

ஏற்கனவே கோஹ்லியும் ஷிகர் தவானும் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியது. கேப் டவுனில் இருக்கும் ஒரு தெருவில் சாலையில் பாடுபவர்களை பார்த்துவிட்டு கோஹ்லியும் தவானும் நடனம் ஆடி இருக்கிறார்கள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிக்காமல் அவர்கள் ஜாலியாக நடனம் ஆடினார்கள்.

Story first published: Wednesday, January 3, 2018, 12:28 [IST]
Other articles published on Jan 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+