கோஹ்லி - அனுஷ்கா வரவேற்பிற்கு அழைக்கப்பட்ட ஒரே ரசிகர்... இலங்கை அணி ரசிகருக்கு ராஜ மரியாதை!
டெல்லி: விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு கடந்த 26ம் தேதி மும்பையில் நடந்தது. இதில் பல முக்கிய நட்சத்திரங்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு ஒரே ஒரு கிரிக்கெட் ரசிகர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார். அவரும் இலங்கை அணியின் கிரிக்கெட் ரசிகர்.
'கயான் சேனநாயகே' என்ற அந்த ரசிகருக்கும் கோஹ்லிக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. இவர் அழைக்கப்பட்டதற்கு பின்பு மிக முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

கோஹ்லி அனுஷ்கா திருமணம்
கோஹ்லி மற்றும் அனுஷ்காவின் திருமணம் கடந்த டிசம்பர் 11ம் தேதி நடந்தது. இத்தாலியில் இருக்கும் மிலன் நகரில் மிகவும் கோலாகலமாக இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

வரவேற்பு
கடந்த டிசம்பர் 21ம் தேதி உறவினர்கள் கலந்து கொள்ளும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். 26 ஆம் தேதி கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் கலந்தும் கொள்ளும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்து. கிரிக்கெட் வீரர்கள், ரகுமான், மோடி என பெரிய பிரபல பட்டாளமே இந்த நிகழ்விற்கு வந்து இருந்தனர்.
ரசிகர்
பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு இலங்கை அணியின் ரசிகர் 'கயான் சேனநாயகே' அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்விற்கு வந்த ஒரே கிரிக்கெட் ரசிகர் இவர் மட்டுமே. கோஹ்லி இவருக்கு தனி மரியாதை கொடுத்தார். இவர் அங்கு இருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஏன் அழைக்கப்பட்டார்
கோஹ்லி 2007ல் அண்டர் 19 போட்டி விளையாடிக் கொண்டு இருந்ததில் இருந்தே கயான் சேனநாயகேவுடன் நண்பராக இருந்துள்ளார். அப்போதே ஒரு இலங்கைக்கு எதிரான போட்டியில் கோஹ்லியை பார்த்து இவர் பாராட்டி இருக்கிறார். அந்த நன்றியை மறக்காமல் கோஹ்லி இவரை அழைத்துள்ளார். கோஹ்லி இலங்கைக்கு எதிராக மோதும் போட்டி அனைத்திலும் இவர் பார்வையாளராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications