Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியா அனுஷ்காவா யார் பெருசுன்னு லைக்ஸ் வாங்கிக்காட்டு.. ஒன்றாக போஸ்ட் செய்த புதுஜோடி!

ரோம்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த திங்கள் கிழமை திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின் தற்போது இதுகுறித்து அவர்கள் டிவிட்டரில் பேசியுள்ளனர்.

கோஹ்லியும் அனுஷ்காவும் ஒரே நேரத்தில் ஒரு நொடி வித்தியாசம் இல்லாமல் இதுகுறித்து டிவிட்டரில் போஸ்ட் செய்துள்ளனர். தற்போது இதில் யாருக்கு அதிக லைக்ஸ், ரீ டிவிட் வந்து இருக்கிறது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஜோடி தற்போது தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல சுவாரசியமாக தகவல்களும் வந்துள்ளது.

மிலன்நகரில் திருமணம்

மிலன்நகரில் திருமணம்

கடந்த சில வருடமாக காதலித்து வந்த கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஜோடி கடந்த திங்கள் கிழமை அன்று திருமணம் செய்து கொண்டனர். இத்தாலியின் மிலன் நகரில் இருக்கும் ஹெரிடேஜ் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

இருவரும் டிவிட்

இந்த திருமணம் முடிந்தவுடன் கோஹ்லி அனுஷ்கா இருவரும் தங்கள் திருமணம் குறித்து டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதில் ''நாங்கள் இருவரும் எப்போதும் காதலில் இருப்போம் என்று இந்த நாள் சத்தியம் செய்து கொண்டோம். இந்த செய்தியை உங்களிடம் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களால் இந்த நாள் மிகவும் அழகாக மாறியுள்ளது. எங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததற்கு மிக்க நன்றி'' என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

யாருக்கு அதிகம்

இந்த டிவிட்டை இருவரும் ஒரே நேரத்தில் ஒரு நொடி வித்தியாசம் இல்லாமல் டிவிட் செய்து இருந்தனர். இருவரும் ஒரே புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தனர் . தற்போது இதில் யாருக்கு அதிக ரீ டிவிட் என்று அனைவரும் சோதனை செய்கின்றனர். அதன்படி கோஹ்லியின் டிவிட் அதிகமாக 88 ஆயிரம் ரீ டிவிட் ஆகியுள்ளது. அனுஷ்கா சர்மாவின் டிவிட் 58 ஆயிரம் ரீ டிவிட் ஆகியுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இந்த ஜோடியின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. தற்போது வரும் 26 ஆம் தேதி கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் கலந்தும் கொள்ளும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடக்கவுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் 24ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் 21ம் தேதி உறவினர்கள் கலந்து கொள்ளும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Story first published: Thursday, December 14, 2017, 10:43 [IST]
Other articles published on Dec 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+