Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. தமிழக மக்களை.. மெய்மறந்து பாராட்டிய கோலி.. அதிரடி பேச்சு!

சென்னை: சென்னை மக்கள் மிகவும் அறிவார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள்தான் எங்களுக்கு பெரிய பலமாக இருந்தார்கள் என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.

கோலி

கோலி

இந்த போட்டிக்கு பின்பாக கோலி அளித்த பேட்டியில், கடந்த போட்டியில் சொந்த மண்ணில் ரசிகர்கள் இன்றி மேட்ச் ஆடுவது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த போட்டியிலும் முதல் இரண்டு நாள் எங்களுக்கு உற்சாகம் இல்லை. அதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது.

பேட்டி

பேட்டி

சென்னை மக்கள்தான் இதை சாத்தியம் ஆக்கியது. மைதானத்தில் மக்கள் இருந்தால் அது எப்படி பயன் அளிக்கும், ஆட்டம் எப்படி மாறும் என்பதற்கு இந்த போட்டி சிறந்த உதாரணம் . சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலியான ரசிகர்கள். அவர்களுக்கு கிரிக்கெட் குறித்த அறிவு அதிகம் உள்ளது.

உற்சாகம்

உற்சாகம்

அவர்களை உற்சாகப்படுத்துவது என்னுடைய வேலை. இப்படி ஒரு வெயிலில் ஆட வேண்டும் என்றால் அதற்கு இதை போன்ற ரசிகர்கள் தேவை . எங்களுக்கு இது மிகவும் சிறப்பான போட்டியாக இருந்தது. மைதானம் இரண்டு அணிக்கும் சவாலான மைதானமாக இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நாங்கள் எங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிகம் ஆதிக்கம் செலுத்தினோம். பிட்ச்மாறுவதை பார்த்து நாங்கள் அச்சப்படவில்லை . பொறுப்பாக ஆடினோம். இதன் மூலமே இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து எங்களால் 600 ரன்கள் வரை எளிதாக எடுக்க முடிந்தது.

பேட்டிங்

பேட்டிங்

நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தால் பவுலர்கள் எங்களுக்காக விக்கெட் எடுப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதை திட்டமிட்டபடி இன்று பவுலர்கள் செய்து முடித்தனர். சென்னை மக்கள் எங்களுக்கு கொடுத்த உற்சாகத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம், என்று கோலி மிகவும் உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, February 16, 2021, 14:04 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+