இதெல்லாம் நியாயமே இல்லை.. வெறியோடு நடுவரை விளாசிய கோலி.. சாஸ்திரிக்கும் கோபம்.. வெளியான ஷாக் வீடியோ!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் கோபம் அடைந்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

என்ன நடந்தது
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் கோபம் அடைந்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நேற்று கடைசி ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். ஜோ ரூட் பேட்டிங் செய்து வந்தார்.
Virat kohli angry on umpire#INDvsENG pic.twitter.com/kToF4QBg8x
— Ashish Yadav (ashishcricket24) February 15, 2021
கோபம்
இந்த நிலையில் அக்சர் பட்டேல் வீசிய பந்தில் ரூட் இன்சைட் எட்ஜ் ஆனது போல சத்தம் கேட்டது. இதனால் பண்ட் ரிவ்யூ கேட்கும்படி கூறினார். இதை ஒப்புக்கொண்டு கோலியும் ரிவ்யூ கேட்டார். ஆனால் ரிவ்யூவில் பந்து பேட்டில் படவில்லை என்று உறுதியானது.

கோலி ரிவ்யூ
இதையடுத்து ரிவ்யூ என்பதால் எல்பிடபிள்யூ ஆனதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பந்து சரியாக ஸ்டம்பை நோக்கி சென்றுள்ளது. லேசாக ஸ்டம்பை பந்து உரசி இருக்கிறது. ஸ்டம்பை பந்து லேசாக உரசியதால் இது அம்பயர்ஸ் கால் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னணி
அம்பயர்ஸ் கால் என்றால் களத்தில் ரிவ்யூவிற்கு முன் நடுவர் என்ன தீர்ப்பு கொடுத்தாரோ அதே தீர்ப்புதான். ஆனால் ரிவ்யூ ரீடெயின் செய்யப்படும். இதனால் ரூட்டுக்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நடுவரின் இந்த முடிவை பார்த்து கோலி கோபம் அடைந்தார்.

நடுவர் தவறு
ரிவ்யூவிற்கு முன் நடுவர் விக்கெட் கொடுத்து இருந்தால், அது விக்கெட்டாக டிஆர்எஸ்ஸில் மாறி இருக்கும். நடுவர் நிதின் மேனனின் முடிவு காரணமாக கோலி கோபத்தின் உச்சிக்கு சென்றார். நடுவருடன் கோலி இதற்காக கோபமாக வாக்குவாதம் செய்தார்.

சாஸ்திரி கோபம்
இதே நடுவர்தான், இதேபோல் பந்து ஸ்டம்பை லேசாக உரசி சென்றதற்கு கோலிக்கு எல்பிடபிள்யூ கொடுத்தார். அதில் அம்பயர்ஸ் கால் மூலம் கோலி அவுட் ஆனார். தற்போது ரூட்டுக்கு சாதகமாக இவர் முடிவு எடுத்துள்ளார். இதுதான் கோலியின் கோபத்திற்கு காரணம் ஆகும்.

விக்கெட்
நேற்று தான் விக்கெட் ஆகிவிட்டோம் என்று ரூட்டுக்கும் தெரியும். இதனால் ரூட்டும் நேற்று கொஞ்சம் ஆச்சர்யத்தில் இருந்தார். நடுவரின் இந்த முடிவு காரணமாக பயிற்சியாளர் சாஸ்திரியும் டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் கோபமாக இருந்தார்.


Click it and Unblock the Notifications