Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓட்டுப் போட வராத கோஹ்லி... அனுஷ்கா பொறந்த நாளுக்கு மட்டும் வர்றாராம்!

டெல்லி: லோக்சபா தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து பேசிய விராத் கோஹ்லி கடைசி வரையில் அவரே ஓட்டுப் போடவில்லை. இந்த நிலையில் தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாளுக்காக அவரைத் தேடி ஓடி வருகிறாராம்.

என்ன காமெடி என்றால் இந்தத் தேர்தலில் கோஹ்லியைப் போலவே அனுஷ்காவும் கூட ஓட்டுப் போடவில்லை என்பதுதான்.

அனுஷ்கா பிறந்த நாளுக்காக அவர் தற்போது படப்பிடிப்புக்காக முகாமிட்டுள்ள ராஜஸ்தானுக்குப் போகிறாராம் கோஹ்லி. நாளை இந்த சம்பவம் நடைபெறவுள்ளது.

டெல்லியில் இருந்தும்

டெல்லியில் இருந்தும்

டெல்லியில்தான் கோஹ்லிக்கு வாக்குரிமை உள்ளது. அதுதான் அவரது சொந்த ஊரும் கூட. ஆனால் டெல்லியில் 10ம் தேதி தேர்தல் நடந்தது. அப்போது கோஹ்லி ஊரில்தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர் ஓ்ட்டுப் போடவில்லை.

எதுக்கு இந்த விளம்பரம்

எதுக்கு இந்த விளம்பரம்

கோஹ்லி தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பிரசாரப் படத்தில் இடம் பெற்று அனைவரும் வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தார். ஆனால் அவரே கடைசியில் ஓட்டுப் போடாமல் வீட்டோடு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோஹ்லி வழியில் அனுஷ்கா

கோஹ்லி வழியில் அனுஷ்கா

அதேபோல அனுஷ்காவும் கூட அவருக்கு ஓட்டுரிமை உள்ள இடத்தில் வாக்களிக்கவில்லை. அவரும் போகவில்லை.

பிறந்த நாள் நாளை பிறந்த நாள்...

பிறந்த நாள் நாளை பிறந்த நாள்...

இந்த நிலையில் மே 1ம் தேதி அனுஷ்காவின் பிறந்த நாளாகும். நாளை அவருக்கு 26 வயது பிறக்கிறது.

அனுஷ்காவைத் தேடி

அனுஷ்காவைத் தேடி

அனுஷ்காவும், கோஹ்லியும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். நாளை அனுஷ்காவின் பிறந்த நாள் என்பதால் அவரைத் தேடி ஓடி வருகிறார் கோஹ்லி.

ராஜஸ்தானில்... ராயல் கொண்டாட்டம்

ராஜஸ்தானில்... ராயல் கொண்டாட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான கோஹ்லி, அனுஷ்காவின் பிறந்த நாளை ராஜஸ்தானில் ராயலாக கொண்டாடவுள்ளார்.

நேற்றோடு எமிரேட்ஸுக்கு குட்பை

நேற்றோடு எமிரேட்ஸுக்கு குட்பை

ஐபிஎல் போட்டிகளின் முதல் சுற்று நேற்றோடு எமிரேட்ஸில் முடிவடைந்தது. பெங்களூர் அணிக்கு அடுத்து மே 4ம் தேதிதான் போட்டி வருகிறது. எனவே இந்த நான்கு நாட்கள் கேப்பில் அனுஷ்காவுடன் சில நாட்கள் செலவிட கோஹ்லி திட்டமிட்டுள்ளாராம்.

Story first published: Wednesday, April 30, 2014, 12:44 [IST]
Other articles published on Apr 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+