Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒலிம்பிக் அணியைத் திட்டாதீர்கள், மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது.. கோஹ்லி ஆவேசம்

கிராஸ் தீவு, மேற்கு இந்தியத் தீவுகள்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியை தொடர்ந்து சிலர் விமர்சித்து வருவது வேதனை தருகிறது. இது தவறு என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் அணிக்கு இதுவரை ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. பதக்கம் பெற்றுத் தருவார்கள் என்று நம்பப்பட்ட யாருமே இதுவரை சாதகமான முறையில் விளையாடவில்லை.

இதனால் இந்திய அணியை பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இது தவறு என்று கூறியுள்ளார் கேப்டன் கோஹ்லி. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...

இதயப்பூர்வமாக விளையாடுகிறார்கள்

இதயப்பூர்வமாக விளையாடுகிறார்கள்

நமது வீரர்களும், வீராங்கனைகளும் உயிரைக் கொடுத்து விளையாடுகிறார்கள். ஆத்மார்த்தமாக விளையாடுகிறார்கள். மிகச் சிறந்த பயிற்சி வசதி கிடைக்காத நிலையிலும் முடிந்தவரை பயிற்சி பெற்று வந்து விளையாடி வருகிறார்கள்.

நமது வசதிகள் மோசம்

நமது வசதிகள் மோசம்

பிற நாடுகளில் மிகச் சிறந்த பயிற்சிகள், வசதிகள் தரப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. அப்படி இருந்தும் கூட நமது வீரர்களும், வீராங்கனைகளும் தன்னம்பிக்கையோடு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

விம்ரசிக்காதீர்கள்

விம்ரசிக்காதீர்கள்

இப்படிப்பட்ட வீரர்கள், வீராங்கனைகளை நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர கடுமையாக விமர்சிக்கக் கூடாது. அவர்களை ஆதரிக்க வேண்டும். இப்படி விமர்சிப்பது எனக்குக் கஷ்டமாக உள்ளது. எனக்கே இப்படி என்றால் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள நமது அணியினருக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும்.

கிரிக்கெட்டிலும் அப்படித்தான்

கிரிக்கெட்டிலும் அப்படித்தான்

கிரிக்கெட்டிலும் கூட அப்படித்தான். எல்லாப் போட்டிகளிலும் நாம் ஜெயிகக் முடியாது. எல்லாத் தொடரையும் வெல்ல முடியாது. தோல்வி வரும்போது ஆதரவாக இருக்க வேண்டும். வெற்றி வந்தால் பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் கோஹ்லி.

ஷோபா டே பேச்சால் வந்த வினை

ஷோபா டே பேச்சால் வந்த வினை

சமீபத்தில் எழுத்தாளர் ஷோபா டே, இந்திய அணியை கடுமையாக விமரிசித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சச்சின் டெண்டுல்கரும் கூட ஷோபா பேச்சை மறைமுகமாக கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 14, 2016, 17:29 [IST]
Other articles published on Aug 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+