Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வெற்றியை கேரளா மக்களுக்கு சமர்பிக்கிறோம்.. களத்தில் கோலி உருக்கம்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளா மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் 370க்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Kohli bats sentiment: We would like to dedicate this victory to the flood victims in Kerala

அதே சமயத்தில் இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏமேலும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது. இதையடுத்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கேரளா வெள்ளம் குறித்து பேசினார்.

அதில், இந்த வெற்றியை கேரளா மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அவர்கள் நிறைய கஷ்டங்களை கடந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு நிறைய மோசமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. எங்களால் இப்போது இது மட்டும்தான் செய்ய முடிந்தது'' என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இவரது பேச்சு இப்போதே இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Wednesday, August 22, 2018, 17:31 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+