For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி 60ல் பண்ணியதை 47ல் காலி பண்ணிய கிங் கோலி..!! ஓர் ஆச்சர்ய, அசத்தல் விவரம்!

Recommended Video

IND vs WI 2019 : Kohli surpasses Ganguly’s overseas test victory record

ஆன்டிகுவா: தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் செய்து காட்டி ஆச்சரியப்படுத்தி இருப்பதை 47 போட்டிகளில் முடித்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் முடிந்திருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Kohli beat dhoni test record in west indies series

இந்த டெஸ்ட் வெற்றி கோலியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக மாறி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அவர் புதிய சாதனை படைத்திருக்கிறார். அந்த சாதனை என்ன என்று பார்ப்போம்.

இது வரை இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்றால் அது சந்தேகமே இல்லை, அக்மார்க் தோனிதான். மொத்தம் 60 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய தோனி அதில் 27 போட்டிகளை வென்று காட்டியிருக்கிறார்.

டெஸ்டில் இருந்து தோனியின் ஓய்வுக்கு பிறகு 2014ம் ஆண்டு புதிய கேப்டனாக வந்தார் கோலி. இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் அவர் அணிக்கு தலைமை ஏற்றிருக்கிறார். அந்த 47 போட்டிகளில் 27 வெற்றிகள், 10 தோல்விகள் மற்றும் 10 டிராக்களை செய்துள்ளார்.

இந்த 27 வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற தோனி சாதனையை 47 போட்டியிலேயே சாய்த்திருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சாதனைகளையே தன் வசமே வைத்திருக்கிறார் கோலி. இனி வரும் போட்டிகளில் அவரது சாதனை பயணம் தொடரும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, August 27, 2019, 12:45 [IST]
Other articles published on Aug 27, 2019
English summary
Kohli beat Dhoni test record in west indies series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+