Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடிப்பிலும் கோஹ்லிதான் கில்லி.. விளம்பரங்களில் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தார்!

டெல்லி: விளம்பரங்களில் வாங்கும் வருமானத்தில் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி கோஹ்லி முதல் இடம் பிடித்துள்ளார். பல வருடங்களாக ஷாருக்கான் முதல இடத்தில் அசைக்க முடியாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் கோஹ்லி மட்டும் கிரிக்கெட் துறையில் இருந்து இடம் பிடித்து இருக்கிறார். 'டஃப் அண்ட் பெல்ப்ஸ்' என்ற அமைப்பு வருடாவருடம் இந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இந்த பட்டியல் விளம்பரங்களில் வாங்கப்படும் சம்பளத்தில் தொடங்கி பொது இடங்களில் பிரபலங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். இப்படி பல்வேறு காரணங்களில் சிறந்து விளங்கியதால் கோஹ்லி முதல் இடம் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கிங் கான்

கிங் கான்

பாலிவுட்டின் கிங் கான், ஷாருக்கான் விளம்பர துறையிலும் முதல் இடத்தில் இருந்தார். 'டஃப் அண்ட் பெல்ப்ஸ்' என்ற நிறுவனம் விளம்பர துறையில் அதிக சம்பளம் வாங்குபவர்களை பட்டியல் இட தொடங்கியதில் இருந்து ஷாருக்கான் தான் முதல் இடம் வகித்து வந்தார். சென்ற வருடம் இவர் 550 கோடி வரை விளம்பரங்களில் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக எப்போதும் தீபிகா படுகோன் இருப்பார்.

முதல் இடம்

முதல் இடம்

கோஹ்லி ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடம்பிடித்து இருக்கிறார். அதன்படி இந்த ஒருவருடம் மட்டும் கோஹ்லி விளம்பரங்கள் மூலம் 920 கோடி சம்பாதித்து இருக்கிறார். சென்ற வருடத்தை விட இது 52 சதவிகிதம் அதிகம் என்று 'டஃப் அண்ட் பெல்ப்ஸ்' தெரிவித்து இருக்கிறது. கோஹ்லிக்கு அடுத்து ஷாருக்கான் இரண்டாம் இடத்தில் 680 கோடி வருமானத்துடன் உள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்தியாவில் மட்டும் இல்லாமல் கோஹ்லி இந்த வருடம் உலகம் முழுக்க அதிக பிரபல ஆகி இருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கியது, பொது இடங்களில் சிறப்பாக நடந்து கொண்டது, பேட்டிகளில் தன்னம்பிக்கையுடன் பேசியது, அதிக செஞ்சுரி, தொடர் வெற்றி என பல விஷயங்கள் இவருக்கு துணை போய் இருக்கிறது. விளம்பரங்களில் இவரது நடிப்பையும் மக்கள் அதிகம் விரும்பி இருக்கின்றனர்.

டோணிக்கு எத்தனையாவது இடம்

டோணிக்கு எத்தனையாவது இடம்

இந்த பட்டியலில் 595 கோடி வருமானத்துடன் தீபிகா படுகோன் 3வது இடத்தில் இருக்கிறார். மேலும் இந்த பட்டியலில் பிவி சிந்து, அலியாபட் என பெண் நட்சத்திரங்களே அதிகம் இருக்கிறார்கள். அக்சய் குமாரும் பட்டியலில் உள்ளார். டோணி 134 கோடி வருமானத்துடன் 13வது இடத்தில் உள்ளார். தென்னிந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் இருக்கும் ஒரே நபர் பிவி சிந்து மட்டுமே. 96 கோடி வருமானத்துடன் அவர் 15வது இடத்தில் உள்ளார்.

Story first published: Friday, December 22, 2017, 14:27 [IST]
Other articles published on Dec 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+