Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கு அடுத்து கோஹ்லிதான்...இந்திய அணியின் 'சதமடிக்கும் இயந்திரம்' செய்த புதிய சாதனை!

மும்பை: மும்பையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக இந்தப் போட்டியில் 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இது அவரின் 31 வது ஒருநாள் சதமாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்துள்ளவர்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தை கோஹ்லி பிடித்துள்ளார்.

 நியுசிலாந்து இந்தியா மோதிய போட்டி

நியுசிலாந்து இந்தியா மோதிய போட்டி

நேற்று மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 49.0 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.

 இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம்

இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து கோஹ்லி மிகவும் நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடினார். அவருக்கு யாருமே சரியான வகையில் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை என்றாலும், அவருடைய பங்கிற்கு மிகவும் சிறப்பாகவே ஆடினார். 125 பந்துகளை சந்தித்த கோஹ்லி 121ரன்கள் எடுத்தார்.

 ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனை

ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனை

இந்த போட்டியில் கோஹ்லி அடித்த சதமானது அவரது சர்வதேச ஒருநாள் போட்டியில் 31 வது சதமாகும். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் அவரது 375 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 30 சதங்களை அடித்துள்ளார். மேலும் 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களை அடித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு முன்பு வரை இந்த சாதனையை சமனில் வைத்து இருந்த கோஹ்லி, நேற்று 31 வது சதம் அடித்ததில் இருந்து பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

 சச்சினுக்கு அடுத்து கோஹ்லிதான்

சச்சினுக்கு அடுத்து கோஹ்லிதான்

இந்த நிலையில் பாண்டிங்கின் சாதனையை முறியடித்த காரணத்தினால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடுத்தவரின் பட்டியலில் கோஹ்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். 463 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்துள்ளார். ஆனால் கோஹ்லி தன்னுடைய 200 வது போட்டியிலேயே 31 சதங்களை அடித்துள்ளார்.மேலும் 200 வது போட்டிகளில் 121 ரன்கள் எடுத்ததன் மூலம் 8888 ரன்களை ஒருநாள் போட்டியில் எடுத்துள்ளார். அதிக ரன்களை விரைவாக எடுத்த இவர் இதே பார்மில் தொடர்ந்தால் விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என கூறலாம்.

Story first published: Monday, October 23, 2017, 9:30 [IST]
Other articles published on Oct 23, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+