ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 அதிரடி இரட்டை சதம்.. "கேப்டன்" கோஹ்லி புதிய சாதனை #captainkohli
இந்தூர்: நியூசிலந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோஹ்லி அபாரமாக ஆடி இரட்டை சதம் போட்டு அடத்தியுள்ளார். அவர் குறுகிய காலத்திற்குள 2 இரட்டை சதம் போட்டு அசத்தியுள்ளார்.
மேலும் அவரது இந்த இரட்டை சதத்தில் ஒரு சாதனையும் அடங்கியுள்ளது.

இந்திய கேப்டன் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் கேப்டனாக கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம்தான் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது விராத் கோஹ்லி இரட்டை சதம் போட்டு அசத்தினார். அது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.
இந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது கோஹ்லி இரட்டை சதம் போட்டுள்ளார்.
கோஹ்லி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை சதம் போட்டுள்ளார். 2 முறை இரட்டை சதம் போட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 25 சதம் போட்டுள்ளார். ஐபிஎல்லில் இவரது சதங்களின் எண்ணிக்கை 4 ஆகும். சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில் மட்டும் இதுவரை அவர் சதம் போட்டதில்லை.


Click it and Unblock the Notifications