For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினைவிட கோஹ்லி பெஸ்ட்டா?.. அது எப்படி கூச்சமில்லாம பேசிட்டீங்க மிஸ்டர் இம்ரான்கான்?

By Veera Kumar

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் என்றும் குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக ஆடுவதாகவும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானுக்கு கோஹ்லியை புகழ்வதைவிட, சச்சினை எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியம் வெகு காலமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இல்லையென்றால், பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக்தான் சச்சினைவிட சிறந்த வீரர் என்று வாய் கூசாமல் அவரால் கூறியிருக்க முடியுமா?. இம்ரான்கான் சொன்னதை இன்சமாமே நம்பவில்லை என்பதால்தான் நைசாக கோஹ்லி பக்கம் தலை சாய்த்துள்ளார் இம்ரான்.

வேலையில்லை

வேலையில்லை

சரி, இந்த கருத்துக்களை கூறுவதற்கு இம்ரான் கானுக்கு ஏது நேரம் என்று கேட்கிறீர்களா. அவர் வெட்டியாகத்தான் இருக்கிறார். அவரின் பி.டி.ஐ கட்சி ஈயாடுகிறது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆப்கன் அணிக்கு இணையாக மாறிப்போய்விட்டது. வேறு என்னதான் செய்ய முடியும் அவரால், பாவம்.

அநாவசிய ஒப்பீடு

அநாவசிய ஒப்பீடு

சச்சினையும், கோஹ்லியையும் ஒப்பிட்டு கருத்து கூறுவது என்பது, அநாவசியமான ஒன்று. இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்ற ஒன்றை தவிர ஒப்பீடு செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது என்பதே உண்மை.

எப்படி இருந்த பிட்ச் இப்படி..

எப்படி இருந்த பிட்ச் இப்படி..

சச்சின் ஆடிய காலகட்டத்திற்கும், இப்போதைய கால கட்டத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. பிட்ச் முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிப்போய், பவுலர்கள் மண்டையை சொரிவது அன்றாடம் காட்சியாக மாறிவிட்டது.

பேர கேட்டாலே அதிருதில்ல

பேர கேட்டாலே அதிருதில்ல

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது சச்சின் காலகட்டத்தில் இருந்த பவுலர்களையும், இப்போதுள்ள பவுலர்களையும் ஒப்பிட வேண்டியதுதான். சச்சின் காலத்தில், கோலோச்சிய பவுலர்கள், அம்புரோஸ், வால்ஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர், மெக்ராத், வார்னே, முத்தையா முரளிதரன், சக்லைன் முஷ்டாக், ஆலன் டொனால்ட், ஷேன் பாண்ட்.. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

வரைட்டி அட்டாக்

வரைட்டி அட்டாக்

மேற்கிந்திய தீவுகள் பவுலர்கள் அபாயகர பவுன்சர் வீசக்கூடியவர்கள். 7 அடி உயரம் கொண்ட அவர்களால், நின்று கொண்டே அதை செய்துவிட முடியும். வக்கார் மற்றும் வாசிம் இருவரும் இன்ஸ்விங்கிங் யார்க்கர் எனப்படும் எதிராளியை குழப்பி, வீழ்த்தும் அபாயகர பந்து வீச்சில் வல்லவர்கள். முரளிதரனும், வார்னேயும் விக்கெட்டுகளை குவித்து உலக சாதனை செய்தவர்கள்.

எகிறவில்லை

எகிறவில்லை

இன்றைய சூழ்நிலை அப்படியா இருக்கிறது. இடுப்புக்கு மேலே எகிறி வரும் பந்துகளை வீச வேண்டுமானால் பவுன்சர் வீச வேண்டிய நிலையில்தான் பவுலர்கள் உள்ளனர். நன்கு பிட்ச் செய்த ஒரு பந்து முழங்காலுக்கு கீழ் உயரத்தில்தான் வருகிறது. எளிதாக அதை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டலாம்.

அப்படீன்னா என்னது..

அப்படீன்னா என்னது..

இன்ஸ்விங்கிங் யார்க்கர் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கிறார்கள் இப்போதுள்ள பவுலர்கள். சமீப காலத்தில், எந்த பவுலராவது அப்படி ஒரு பந்தை வீசி நீங்கள் பார்த்ததுண்டா. ஸ்பின்னர்களில் யாருடைய பந்தாவது திரும்புகிறதா?

ஏதோ அங்கொன்று, இங்கொன்று

ஏதோ அங்கொன்று, இங்கொன்று

இப்போதுள்ள பவுலர்களில் திறமையானவர்கள் என்றால் ஆஸி.யின், மிட்சேல் ஸ்டார்க், நியூசிலாந்தின் பவுல்ட், இங்கிலாந்தின் ஆன்டர்சன், வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், மேற்கிந்திய தீவுகளின் நரீன் ஆகியோரைத்தான் கஷ்டப்பட்டு கை காட்ட முடியும். பேட்டிங் பிட்சில் இவர்களையும் வெளுத்து தோரணம் கட்டிவிடுகிறார்கள்.

என்ன நெருக்கடியாம்?

என்ன நெருக்கடியாம்?

மேலும், இந்த பவுலர்களுக்கு எதிராக கோஹ்லி அதிக இன்னிங்சுகளை ஆடவில்லை. கோஹ்லி அடித்தது, பல் இல்லாத பவுலிங் அட்டாக்குகளைத்தான். அப்புறம், நெருக்கடியான சூழ்நிலையை தாக்குப்பிடித்துவிட்டார் என இம்ரான் கான் மார்தட்டுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

சிறந்த வீரர்தான்

சிறந்த வீரர்தான்

கோஹ்லி திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவது ஒரு வரம். ஆனால் அதை சச்சினுடன் ஒப்பிட்டே தீர வேண்டும் என்பதில்தான் சிக்கல். இப்படி ஒப்பிட்டு பார்த்தால் சச்சினையும், அதற்கு முந்தைய தலைமுறையின் கவாஸ்கரையும் ஒப்பிட வேண்டிவரும்.

கவாஸ்கரை ஒப்பிட முடியுமா

கவாஸ்கரை ஒப்பிட முடியுமா

கவாஸ்கரைவிட சச்சின் சிறந்தவர் என்று சொல்வதை சச்சின் கூட விரும்ப மாட்டார். புயல் வேக பந்துகளுக்கு முன்னால், ஹெல்மெட் அணியால் கவாஸ்கர் சாதித்ததை கொச்சைப்படுத்துவது போலாகிவிடும் அந்த ஒப்பீடு. அதேபோலத்தான் சச்சின்-கோஹ்லி ஒப்பீடும் தேவையற்றது.

வேலையை பார்க்கலாமே

வேலையை பார்க்கலாமே

உண்மை தெரிந்துதான் சச்சினை தனது குருவாக மதிக்கிறார் கோஹ்லி. எனவே இனியாவது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இன்சமாமை விட சிறந்த ஒரு பேட்ஸ்மேனை உருவாக்க இம்ரான்கான் முயலட்டும். அல்லது வாயை மூடி இருக்கட்டும்.

Story first published: Friday, June 17, 2016, 13:26 [IST]
Other articles published on Jun 17, 2016
English summary
Former Pakistani cricket captain and now a politician, Imran Khan, has a habit of giving former Indian cricket captain Sachin Tendulkar the second-best ranking in comparisons.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+