Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: அடடா.. இதுவல்லவா கொண்டாட்டம்..!! விக். எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன்

Recommended Video

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன் கோலி

மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் விழுந்ததை டான்ஸ் ஆடி கோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக் காரர்களாக குப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினர்.

Kohli celebrates nicholls wicket video goes viral

போட்டியின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தே குப்திலின் காலில் பட்டு சென்றதால் அம்பயரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என்றார்.

இதனை அடுத்து கேப்டன் கோலி 3வது அம்பயரிடம் ரிவ்யூ கோரினார். அப்போது பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகி சென்றதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனாலும் 4வது ஓவரில் குப்தில் 1 ரன்னில் அவுட்டானார்.

பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலசுடன் இணைந்து நிதானமாக ஆடினார். அதில் நிக்கோலஸ் 28 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜாவின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, July 9, 2019, 23:55 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+