ஆமாப்பா… சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்… முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்
லண்டன்:கிரிக்கெட் உலகில் சச்சின், லாராவை விட தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி தான் என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுடனான 3வது ஒருநாள் போட்டியில் 314 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.அந்த போட்டியில் கோலி 95 பந்துகளில 123 ரன்கள் குவித்தார்.
கேப்டன் கோலி ஒருநாள் போட்டிகளில் நேற்று தனது 41வது சதத்தை நிறைவு செய்தார். இதனையடுத்து ட்விட்டரில் யார் சிறந்த ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் என்ற விவாதம் எழுந்தது.
டுவிட்டர் பதிவு
இதற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பொருள்படும் GOATஐ குறிக்க ஆட்டின் படத்தை எமோஜியாக பதிவிட்டு டுவிட்டரில் விராட் என்று கூறினார்.

வாகன் சொன்ன பதில்
அதற்கு மற்றொருவர் பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில்... அப்படியென்றால் சச்சின், லாராவை விட சிறந்த வீரர் கோலி என்கிறீர்களா என்று கோரியிருந்தார்.

கோலி சிறந்த வீரர்
அதற்கான பதிலையும் மைக்கேல் வாகன் தீட்டியுள்ளார். ஆம்... ஒருநாள் போட்டிகளில் கோலி சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார்.
விமர்சனங்கள்
பின்னர் இன்னொருவர் செய்த ட்விட்டான ''சச்சின், லாராவை விட விராட் சிறந்தவர்'' என்ற ட்விட்டுக்கு "ஆம்" என பதிலளித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பல விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications