விளம்பர படங்களில் நடிக்க நாள் ஒன்று கோஹ்லி கேட்பது ரூ. 1.5 சி மட்டுமே!
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தொடர்ந்து ஃபார்மில் இருந்து வருகிறார். போட்டி என்று வந்துவிட்டால் பேட்டிங்கில் விளாசித் தள்ளுகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோஹ்லி தான்.
கோஹ்லியா கண்டிப்பாக நல்லா விளையாடுவார் என்று சொல்லும் அளவுக்கு அவரது ஃபார்ம் உள்ளது.

டோணி, கோஹ்லி
உலக அளவில் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை இஎஸ்பிஎன் வெளியிட்டது. அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள இரண்டு கிரிக்கெட் வீரர்கள் டோணி மற்றும் கோஹ்லி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 100 கோடி கிளப்
கோஹ்லி 13 பிராண்டுகளின் அம்பாசிடராக உள்ளார். அவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 100 கோடி வரை சம்பாதிப்பதால் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ளார். இந்த ரூ.100 கோடி கிளப்பில் பெரிய பெரிய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

அடிடாஸ்
ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் விளம்பரம் செய்த அடிடாஸ் பிராண்டின் தற்போதைய விளம்பர அம்பாசிடர் கோஹ்லி ஆவார். இதற்காக அடிடாஸ் அவருக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி அளிக்கிறது.

விளம்பரம்
விளம்பரப் படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை டோணியிடம் இருந்து கோஹ்லிக்கு சென்றுள்ளது. கோஹ்லி எம்.ஆர்.எப்.புடன் ரூ.8 கோடிக்கு பேட் டீல் போட்டுள்ளார். விளம்பர படங்களில் நடிக்க கோஹ்லி நாள் ஒன்றுக்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறார். டோணி விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி பெறுகிறார்.


Click it and Unblock the Notifications