Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீங்க எல்லாம் தேவையில்லை".. ஹீரோக்களை புறக்கணித்தால் இப்படித்தான் ஆகும்.. கோலிக்கு பாடமெடுத்த வீரர்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலர்கள் மோசமாக சொதப்பி உள்ளனர். இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி உள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி 555 ரன்களை கடந்தும் ஆடி வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிரடியாக 218 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலர்கள் மோசமாக சொதப்பி உள்ளனர். முக்கியமாக முதல் ஒன்றரை நாள் ஆட்டத்தில் விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் கடுமையாக திணறினார்கள். நேற்று இஷாந்த் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

மோசம்

மோசம்

ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில்தான் அவர் விக்கெட் எடுத்தார். அதுவும் பட்லர் போன்ற முக்கிய வீரர்கள் அவுட்டான பின் பவுலர்களை மட்டும் இஷாந்த் சர்மா விக்கெட் எடுத்தார். அதுவரை இஷாந்த் சர்மா விக்கெட் எடுக்க கூடிய வகையில் பந்து எதையும் போடவில்லை.

பவுலிங்

பவுலிங்

இன்னொரு பக்கம் பும்ரா, அஸ்வின் மட்டுமே கொஞ்சம் நன்றாக பவுலிங் செய்தனர். நதீம் இரண்டு விக்கெட் ஏ எடுத்தாலும் வீசி அதிக ரன்கள் கொடுத்தார். பெரிய அளவில் பவுலிங்கில் வேரியேஷன் காட்டவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய பவுலர்கள் சிராஜ், ஷரத்துல் தாக்கூர், நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்தனர்.

விக்கெட்

விக்கெட்

ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அந்த நாட்டு வீரர்களை சிறப்பாக எதிர்கொண்டனர். இப்படிப்பட்ட வீரர்களை கோலி புறக்கணித்துள்ளார். அதிலும் சிராஜை அணியில் எடுக்காமல் காயத்தில் இருந்து மீண்டு வந்த இஷாந்த் சர்மாவை அணியில் எடுத்துள்ளார்.

குல்தீப்

குல்தீப்

முக்கியமாக குல்தீப் போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சம்பந்தம் இன்றி நதீம் போன்ற வீரர்களை கோலி களமிறக்கி உள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் கலக்கிய ஹீரோக்களை கோலி புறக்கணித்துவிட்டு வேறு வீரர்களை களமிறங்கியது இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

நல்ல பார்மில் இருந்த சிராஜ், தொடர்ந்து ஒன்றரை மாதமாக பயிற்சி செய்த யாதவை கோலி புறக்கணித்துள்ளார். இதனால் இந்திய அணி இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் கடுமையாக திணறி வருகிறது. கோலிக்கு இது மிகப்பெரிய பாடமாக மாறியுள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 10:07 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+