Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. முதலிடம் பிடித்தார் கோஹ்லி

லண்டன் : டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோஹ்லி.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 149 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களையும் குவித்தார். இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.அவர் 934 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Kohli climbs to the First spot in Test batsment Rankings

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 32 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மார்ச் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். அதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.

விராட் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதும் இதுவே முதல் முறை.

இச்சாதனையை செய்த 7 ஆவது இந்திய வீரர் விராட் கோஹ்லி ஆவார். இதற்கு முன்னாள் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கௌதம் கம்பிர், சேவாக், கவாஸ்கர் மற்றும் வெங்சர்க்கார் ஆகியோர் தங்களது கிரிக்கெட் வாழ்வின்போது முதல் இடத்தை பிடித்த மற்ற இந்தியர்கள் என்பது சிறப்பு.

இப்போட்டி தொடர் ஆரம்பிக்கும் முன்பாக கோஹ்லி இரண்டாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உள்ளார்.

Story first published: Sunday, August 5, 2018, 15:14 [IST]
Other articles published on Aug 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+