Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி... ஆனாலும் இரண்டாவது இடம்தான்!

துபாய் : ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டாவது இடத்தில் உள்ள விராட் கோலி புள்ளிகள் அடிப்படையில் மேலும் நெருங்கியுள்ளார்.

பௌலர்களுக்கான பட்டியலில் இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ராவை ஸ்பின்னர் ஆர் அஸ்வின் 4 இடங்கள் முந்தியுள்ளார்.

ஸ்மித்தை நெருங்கிய கோலி

ஸ்மித்தை நெருங்கிய கோலி

ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையிலான புள்ளிகளின் வித்தியாசம் 25ஆக இருந்தது.

13ஆக குறைந்த வித்தியாசம்

13ஆக குறைந்த வித்தியாசம்

இந்நிலையில் தற்போது புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு போட்டியில் தோல்வியடைந்தாலும் முதல் இன்னிங்சில் 74 ரன்களை எடுத்திருந்தார் விராட் கோலி. இதையடுத்து தற்போது அவர் மற்றும் ஸ்மித் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 13ஆக குறைந்துள்ளது. ஆயினும் இரண்டாவது இடத்திலேயே நீடித்து வருகிறார் கோலி.

2 புள்ளிகள் ஏறிய கோலி

2 புள்ளிகள் ஏறிய கோலி

ஸ்டீவ் ஸ்மித் கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ளதால் இருவருக்குமான புள்ளிகள் வித்தியாசம் குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் ஸ்மித் 901 புள்ளிகளும் விராட் கோலி 888 புள்ளிகளும் எடுத்துள்ளனர். ஸ்மித் 10 புள்ளிகள் இறங்கியும் கோலி 2 புள்ளிகள் ஏறியும் உள்ளனர்.

பும்ராவை முந்திய அஸ்வின்

பும்ராவை முந்திய அஸ்வின்

இதனிடையே, இந்தியாவின் முன்னணி பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா அதே 9வது இடத்திலேயே தொடரும் நிலையில், கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர் அஸ்வின் 4 இடங்கள் முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பாட் கமின்ஸ் 910 புள்ளிகளுடன் நீடிக்கிறார்.

Story first published: Sunday, December 20, 2020, 17:14 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+