Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேப்பி பர்த்டே சோபர்ஸ் "தாத்தா"... கோஹ்லி அன் கோவின் "ஸ்வீட்" பிறந்த நாள் வாழ்த்து!

கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கேரி சோபர்ஸ் இன்று தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும், இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சோபர்ஸை சந்திக்க தான் பெருத்த ஆவலுடன் இருப்பதாக கோஹ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோஹ்லி பிசிசிஐ இணையதளத்திற்கு அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில், மைதானத்தில் உங்களது செயல்பாடுகள் என்றுமே ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். போட்டியின் போக்கை மாற்றிய மிகச் சில அரிய ஜாம்பவான்களில் நீங்களும் ஒருவர். உங்களது அருமையான கிரி்க்கெட்டுக்கும், வாழ்க்கைக்கும் எனது வாழ்த்துகள். உங்களது 80வது பிறந்த நாளில் உங்களை வாழ்த்துவது எனக்குக் கிடைத்த சந்தோஷம் என்று கூறியுள்ளா் கோஹ்லி.

Kohli & Co wishes WI legend Sobers on 80th birthday

மேலும் அவர் கூறுகையில், உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். உங்களுடன் உரையாட ஆவலாக உள்ளேன். ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் கோஹ்லி.

இதேபோல பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, ரோஹித் சர்மா, மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோரும் சோப்ரஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, July 29, 2016, 15:09 [IST]
Other articles published on Jul 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+