For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய குழப்பம்.. இவங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது.. கோலிக்கு கெடு விதித்த நிர்வாகம்.. பின்னணி

சிட்னி: இந்திய அணியில் முக்கியமான இரண்டு இடங்களில் ஆட போகும் வீரர்கள் யார் என்ற குழப்பம் பெரிய அளவில் நீடித்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

பயிற்சி ஆட்டங்கள் மூலம் இரண்டு அணிகளும் இந்த தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கெடு

கெடு

இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியம் என்பதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இரண்டு இடங்கள்தான் அதிக குழப்பமாக உள்ளது. ஒன்று மிடில் ஆர்டர், இன்னொன்று ஓப்பனிங்.

யார்

யார்

இந்திய அணியின் ஓப்பனிங்கில் கண்டிப்பாக மயங்க் அகர்வால் ஒரு வீரர் என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு வீரர் யார் என்பதுதான் சந்தேகமாக உள்ளது. கே. எல் ராகுல் ஓப்பனிங் இறங்குவாரா, அல்லது பிரித்வி ஷா, சுப்மான் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

கே. எல் ராகுல் இப்போது இருக்கும் பார்மில் அவரை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் சுப்மான் கில் நன்றாக ஆடி வருகிறார். இதனால் அவரைத்தான் ஓப்பனிங் இறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ரெக்கார்ட்

ரெக்கார்ட்

இதெல்லாம் போக டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷாவிற்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது. இதனால் அவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓப்பனிங் யார் என்பது சந்தேகமாக உள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

அதேபோல் மிடில் ஆர்டரில் ஆட போகும் வீரர் யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.ரிஷாப் பண்ட், விர்த்திமான் சாகா இரண்டு பேரில் மிடில் ஆர்டரில் யார் இறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இரண்டு பேருமே பயிற்சி ஆட்டங்களில் சுமாராக ஆடி உள்ளனர். இதனால் இவர்களில் யார் களமிறங்குவார் என்று சந்தேகம் வந்துள்ளது.

உத்தேச அணி

உத்தேச அணி

இந்த நிலையில் கோலி இன்னும் இரண்டு நாட்களுக்குள் உத்தேச அணி லிஸ்டை கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுள்ளது. அணியின் பயிற்சி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதற்காக கோலிக்கு இந்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை அறிவிக்கும் முனைப்பில் கோலி தீவிரம் காட்டி வருகிறார்.

Story first published: Monday, December 14, 2020, 23:46 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
Captain Kohli confused with two spots in Test Team India against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+