Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வு பெற்றதும் குமுறிக் குமுறி அழுத கோஹ்லி

டெல்லி: டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் தான் அழுததாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி டிசம்பர் மாதம் 30ம் தேதி அறிவித்தார்.

அதன் பிறகு நடந்தவை குறித்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில்,

ஆச்சரியம்

ஆச்சரியம்

டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்துவிட்டார். அப்படி இருக்கையில் அவர் டெஸ்ட் கேப்டன் இல்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது.

கேப்டன்

கேப்டன்

டோணியை அடுத்து நான் தான் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் ஆகப் போகிறேன் என்பதை அப்போது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

சிறிது நேரம் கழித்து எனது அறைக்கு சென்றேன். அங்கு அனுஷ்கா சர்மா இருந்தார். அவரிடம் செய்தியை தெரிவித்தேன். அவருக்கும் ஆச்சரியாக இருந்தது. அவர் ஏன் இப்படி செய்தார் என்றார்.

அழுகை

அழுகை

நான் தான் அடுத்த கேப்டன் என்பதை ஏற்கவே எனக்கு சிறிது நேரம் எடுத்தது. அதன் பிறகு நான் அழத் துவங்கிவிட்டேன். இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

நான் கிரிக்கெட் ஆடத் துவங்கியபோது 26 வயதில் நீ டெஸ்ட் அணியின் கேப்டனாவாய் என்று கூறியிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். ஆனால் அது நடந்துள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே என் ஒரே கனவு. நான் கேப்டனான தருணம் சிறப்பானது என்றார் கோஹ்லி.

Story first published: Thursday, June 4, 2015, 15:57 [IST]
Other articles published on Jun 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+