Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 பவுலர்களை வைத்து ஆடியதில் தவறில்லை.. சொல்கிறார் கோஹ்லி

காலே: 5 பவுலர்களை வைத்து ஆடப் போகிறேன் என்று கூறிய பிறகு எனது உத்தியை மாற்றுவது சரியாக இருக்காது. 6 பேட்ஸ்மேன்களுடன் நாங்கள் அருமையாக ஆடியிருக்க முடியும். அதை நாங்கள் செய்யவில்லை. அதுதான் தவறு என்று முதல் டெஸ்ட் தோல்விக்குக் காரணம் கூறியுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா தோல்வியைத் தழுவி விட்டது. இத்தனைக்கும் முதலில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கையே வலுவாக ஓங்கியிருந்தது.

ஆனால் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். மேலும் இலங்கை வீரர் ஹெராத்தும் அபாரமாக பந்து வீசி இந்திய அணியை நிலைகுலைய வைத்து விட்டார்.

இதற்கிடையே, கோஹ்லி, 5 பவுலர்களை வைத்து ஆடியது தவறு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு போட்டி முடிவில் விளக்கம் அளித்தார் கோஹ்லி. அவரது பேட்டியிலிருந்து...

பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு

பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு

எங்களது பந்து வீச்சாளர்கள் தவறு செய்யவில்லை. அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் மீதுதான் தவறு. அவர்கள் சரியாக ஆடவில்லை. பொறுப்பை உணர்ந்து ஆடவில்லை.

துரத்துவதில் கவனம் சரியில்லை

துரத்துவதில் கவனம் சரியில்லை

176 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது இருக்க வேண்டிய பொறுப்பும், நிதானமும், எங்களது பேட்ஸமேன்களிடம் இல்லை. அதுவே தவறு.

5 பவுலர்கள் உத்தியில் தவறில்லை

5 பவுலர்கள் உத்தியில் தவறில்லை

5 பவுலர்கள் வைத்துக் கொண்டு ஆடியதை தவறாக நான் நினைக்கவில்லை. இன்னொரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் கருதவில்லை.

பேட்டிங்கை நாங்கள் சரியாக செய்யவில்லை

பேட்டிங்கை நாங்கள் சரியாக செய்யவில்லை

5 பவுலர்களை வைத்து 20 விக்கெட்களைச் சாய்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் போட்டியில் நுழையும்போது, மீதமுள்ள 6 பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஆடவில்லை.

பவுலர்கள் மீது குறையே இல்லை

பவுலர்கள் மீது குறையே இல்லை

எங்களது பவுலர்கள் மீது எந்தக் குறையும் இல்லை. மிகச் சிறப்பாக அவர்கள் செயல்பட்டனர். சரியான முறையில் பந்து வீசவும் செய்தனர். நமது ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்தினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தங்களது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றார் கோஹ்லி.

Story first published: Sunday, August 16, 2015, 12:11 [IST]
Other articles published on Aug 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+