Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு டிசர்ட் போடுவது குத்தமாய்யா?: 'அந்த' ட்வீட்டை டிலீட் செய்த கோஹ்லி

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அணிந்த ஒரு டிசர்ட்டில் எழுதிய வாசகத்தை பார்த்துவிட்டு அவர் மீண்டும் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்துவிட்டாரோ என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த அவர் அந்த ட்வீட்டையே டிலீட் செய்துவிட்டார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். கோஹ்லி அனுஷ்காவுடன் மீண்டும் சேர முயற்சி செய்தும் முடியவில்லை.

கோஹ்லியுடன் மீண்டும் சேர்வது இல்லை என்பதில் அனுஷ்கா உறுதியாக இருந்தார்.

இரவு விருந்து

இரவு விருந்து

கோஹ்லியும், அனுஷ்காவும் பிரிந்துவிட்ட நிலையில் அண்மையில் இருவரும் இரவு நேரத்தில் ஜோடி போட்டு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி சக வீரரான பார்த்தீவ் பட்டேலுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் கோஹ்லி அணிந்திருந்த டி சர்ட்டில் நாங்கள் பிரிந்திருந்தோம் என்று எழுதியிருந்தது.

மீண்டும்?

மீண்டும்?

கோஹ்லியின் டிசர்ட் வாசகத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவரும், அனுஷ்கா சர்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்களோ என்று பேசத் துவங்கினர். இருக்கும் ஒன்று சேர்ந்திருப்பார்கள் அதை தான் கோஹ்லி சூசகமாக தெரிவித்துள்ளார் என்றனர் ரசிகர்கள்.

வேண்டாமே

வேண்டாமே

ஒரு டிசர்ட் போடுவது குத்தமா, இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்களே என்று நினைத்த கோஹ்லி புகைப்படம் இருந்தால் தானே பேசுவீர்கள் என அந்த ட்வீட்டையே டிலீட் செய்து விட்டார்.

Story first published: Wednesday, April 13, 2016, 13:42 [IST]
Other articles published on Apr 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+