ஹரே ஹரே ஹரே.... பாங்கரா டான்ஸ் ஆடிய கோஹ்லி மற்றும் தவான்... யாரு சூப்பர்!
செல்ம்ஸ்போர்ட்: இங்கிலாந்தின் கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின்போது மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ஷிகார் தவான் பாங்கரா டான்ஸ் ஆடி கலகலப்பை ஏற்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ல் துவங்குகிறது. அதற்கு முன்பு எசக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளைாடியது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா பவுலிங் செய்வதற்காக களம் இறங்கியது. அப்போது, இந்திய வீரர்களை வரவேற்கும் வகையில், டோல் எனப்படும் வாத்தியம் இசைக்கப்பட்டது.
அப்போது மைதானத்துக்குள் முதலில் இறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, பஞ்சாபில் புகழ்பெற்ற பாங்கரா நடனத்தின் சில ஸ்டெப்களை எடுத்து வைத்து சிரித்துக் கொண்டே சென்றார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஷிகார் தவானும் சில ஸ்டெப்களை வைத்து கலகலப்பை ஏற்படுத்தினார். வீரர்கள் குஷியாக நடனமாடியதை, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.


Click it and Unblock the Notifications