பாலிவுட் ஹீரோக்களுக்கு எதிராக 'ஃபுட்பால்' விளையாடும் டோணி-கோஹ்லி: ஜெயிக்கப் போவது யார்?
மும்பை: நல்ல காரியத்திற்காக நடத்தப்படும் கால்பந்தாட்டப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் டோணியும், கோஹ்லியும் விளையாட உள்ளனர்.
நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டும் பணியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் கைகோர்த்துள்ளது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் விராட் கோஹ்லி பவுன்டேஷன்.
அபிஷேக்கும், கோஹ்லி பவுன்டேஷனும் சேர்ந்து கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மும்பை
செலபிரிட்டி கிளாஸியோ 2016 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கால்பந்தாட்ட போட்டி வரும் 4ம் தேதி அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் உள்ள மும்பை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறுகிறது.

டோணி-கோஹ்லி
ஒரு அணிக்கு கோஹ்லியும், மற்றொரு அணிக்கு அபிஷேக் பச்சனும் கேப்டனாக இருப்பார்கள். இந்த போட்டியில் கேப்டன் டோணியும் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

பஜ்ஜி, யுவி
டோணி, கோஹ்லி மட்டும் அல்ல இந்த போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் ஜஹீர் கான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.

ரன்பிர் கபூர்
அபிஷேக் பச்சன் அணியில் பாலிவுட் நடிகர்கள் ரன்பிர் கபூர், அர்ஜுன் கபூர், அதித்யா ராய் கபூர், இயக்குனர் சூஜித் சர்கார் உள்ளிட்டோர் உள்ளனர். பிரபலங்கள் விளையாடும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications