
ஐசிசி பட்டியல்
உலக கோப்பை தொடரில் 23 போட்டிகள் நடந்து முடிந்தது வரையுள்ள நிலவரத்தையும் கணக்கில் கொண்டு ஐசிசி தனது தரவரிசையை பட்டியலை வெளியிட்டுள்ளது.

கோஹ்லி, டோணி
இதில் கோஹ்லி, 847 புள்ளிகளுடன், 4வது இடத்திலும், 712 புள்ளிகளுடன், டோணி 10வது இடத்திலும் உள்ளனர். இருவருமே தங்களது முந்தைய ரேங்கில் இருந்து சரிந்துள்ளநர்.

முதலிடத்தில் டி வில்லியர்ஸ்
இந்த பட்டியலில் 898 புள்ளிகளுடன், முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டி வில்லியர்ஸ் உள்ளார். 2வது இடத்தில் தலா 849 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின், ஹசிம் ஆம்லா, இலங்கையின் சங்ககாரா ஆகியோர் உள்ளனர்.

தவான் இடத்தில் மாற்றமில்லை
இலங்கையின் தில்ஷன், கனே வில்லியம்சன் ஆகியோர் முறையே, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர். ஷிகர் தவான் 784 புள்ளிகளுடன் 7வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ச், அந்த அணியின் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் முறையே, 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளனர்.

பத்து இடத்தில் யாருமில்லை
எந்த ஒரு இந்திய பவுலரும் முதல் 10 இடங்களை பிடிக்கவில்லை என்றபோதிலும், ஷமி மற்றும் அஸ்வின் ரேங்கில் முன்னேறியுள்ளனர். அதே நேரம் புவனேஸ்வர் குமார் மற்றும் ரவீந்திரஜடேஜா இருவரும் 4 இடங்கள் சறுக்கி, முறையே, 17 மற்றும் 18வது இடங்களில் உள்ளனர்.

விளையாடாமலே நம்பர்-1
பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தானின் சையது அஜ்மல் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இவர் உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்றபோதிலும், புள்ளிகணக்கு அடிப்படையில் வேறு பவுலர்களால் நெருங்க முடியவில்லை.

ஷமி முன்னேற்றம்
இந்தியாவின் முகமது ஷமி 11வது இடத்திலும், அஸ்வின் 16வது இடங்களையும் பிடித்துள்ளனர்.

பத்து பந்து வீச்சாளர்கள் இதோ..
பந்து வீச்சாளர்களில், சையது அஜ்மல், சுனில் நரைன், டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹீர். மிட்சேல் ஸ்டார்க், மிட்சேல் ஜான்சன், ஜேம்ஸ் ஆன்டர்சன், சஹில் அல் ஹசன், டேனியல் வெட்டோரி, முகமது இர்பான் ஆகியோர் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











