Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஏன் டீமில் இருக்கிறார்? இரக்கமே இன்றி ஓரம்கட்டிய கோலி.. பரிதாபமாக பீல்டிங் செய்த மூத்த வீரர்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கோலியின் பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.

6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.6 விக்கெட்டிற்கு இங்கிலாந்து 116 ரன்கள் எடுத்துள்ளது.

 சென்னை

சென்னை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கோலியின் பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் 5 பவுலர்கள் உள்ளனர். 3 ஸ்பின் பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்திய அணியில் கடந்த போட்டியில் ஆடிய நதீம், சுந்தர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாறாக குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து இதுவரை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

மோசம்

மோசம்

ஆனால் குல்தீப் யாதவ் பெரிய அளவில் சரியாக பவுலிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சில் இவர் 6 ஓவர் வீசினார். அதன்பின் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்றும் கூட 44 ஓவர்கள் வரை குல்தீப் யாதவிற்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை. பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது. ஆனாலும் கூட குல்தீப் யாதவிற்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை. குல்தீப் யாதவை கோலி கொஞ்சம் கூட சரியாக பயன்படுத்தவில்லை. மாற்று பீல்டராக இறங்கும் வீரர் போல குல்தீப் பீல்டிங் மட்டுமே செய்து கொண்டு இருந்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

குல்தீப் யாதவிற்கு பவுலிங் கொடுக்கவில்லை என்றால் அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும். ஏன் 5 பவுலர்களை கொண்டு வர வேண்டும். கோலி ஏன் குல்தீப் யாதவை நம்புவதே இல்லை என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Tuesday, February 16, 2021, 12:15 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+