அவரை புறக்கணித்தது நீங்கதான்.. இளம் வீரரால் கோலிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. அணி தேர்வில் குளறுபடி!
சென்னை: இந்திய அணியில் இளம் வீரர் ஒருவரை கேப்டன் கோலி தேவையின்றி புறக்கணித்துவிட்டார் என்று புகார்கள் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் இந்திய அணியில் இருக்கும் பல வீரர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதிலும் அஸ்வின், விஹாரி, பண்ட் போன்ற வீரர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றிபெறவும், மூன்றாவது டெஸ்ட் டிரா ஆகவும் இளம் வீரர் பண்ட் மிக முக்கியமான காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தார். அந்த போட்டியில் ரிஷாப் பண்டிற்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை. பண்டிற்கு பதிலாக சாஹாவிற்கு கேப்டன் கோலி வாய்ப்பு கொடுத்து இருந்தார்.

வாய்ப்பு
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய கோலியின் இந்த அணி தேர்வும் முக்கியமான காரணமாக இருந்தது. கோலி சரியான அணியை தேர்வு செய்யாமல் போனதும், பண்டிற்கு வாய்ப்பு கொடுக்காமல் போனதும் இந்திய அணிக்கு எதிராக திரும்பியது.

மோசம்
அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற பண்ட் தனது திறமையை நிரூபித்து அணியை வெற்றிபெற வைத்தார். கோலி இல்லாமல் பண்ட் மூலம் இந்தியா வெற்றிபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் பண்டை கோலி தேவையின்றி புறக்கணிக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது. அவர் அதிரடியாக ஆட கூடியவர் .

எடுக்கவில்லை
ஆனால் கோலி இவரை நம்புவது இல்லை. முக்கியமாக கடந்த உலகக் கோப்பை தொடரிலே பண்டிற்கு பதிலாக விஜய் சங்கரை கோலி தேர்வு செய்தார். அதன்பின் தொடரின் பாதியில் பண்டை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பண்ட் நல்ல பார்மில் இருந்தும் அவரை டி 20, ஒருநாள் அணியில் கோலி எடுக்காமல் புறக்கணித்தார்.

ரஹானே
ஆனால் ரஹானேதான் இவரை சப்போர்ட் செய்து வாய்ப்பு கொடுத்தார். இதனால் கோலியின் அணி தேர்வு விமர்சனங்களை சந்தித்துள்ளது. முக்கிய வீரர்களை சப்போர்ட் செய்யாமல் கோலி புறக்கணிக்கிறாரோ, தேவையின்றி வீரர்களை அடிக்கடி நீக்குகிறாரோ என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இங்கிலாந்து
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தன்னிச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். கண்டிப்பாக ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோரும் பிளேயிங் லெவன் வீரர்களை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications