Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க.. "கேப்" போட்டுகொண்டு வந்த கோலி..எக்ஸ்பர்ட்கள் கடும் அதிர்ச்சி.. ஏன்?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங் இறங்கும் போது கேப் மாட்டிக்கொண்டு வந்தது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா திணறி வருகிறது. புஜாரா, ரஹானே, சுப்மான் கில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து கடுமையாக திணறி வருகிறது. கோலி, பண்ட் மட்டும் களத்தில் இறக்கும் நிலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

சர்ச்சை

சர்ச்சை

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங் இறங்கும் போது கேப் மாட்டிக்கொண்டு வந்தது விமர்சனங்களை சந்தித்துள்ளது. பொதுவாக பேட்டிங் இறங்கும் வீரர்கள் கேப் போட்டு வருவதற்கு நிறைய காரணம் இருக்கும். கீழே குனிந்து ஷாட் அடிக்காத வீரர்களை கேப் போட்டுகொண்டு வருவார்கள்.

கேப்

கேப்

அதாவது ஸ்வீப் ஷாட் ஆடாத வீரர்கள்தான் பொதுவாக கேப் போட்டுகொண்டு வருவார்கள். தற்போது சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங் செய்வதற்கு ஏற்ற பிட்சாக இருக்கிறது. இங்கு இங்கிலாந்து அணி வீரர்கள் நன்றாக ஆடி வருகிறார்கள். இந்த பவுலிங்கை எதிர்கொள்ள வேண்டும் என்றால் ஸ்வீப் ஷாட் ஆட வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை இப்படி ஸ்வீப் ஷாட் மூலம்தான் ஜோ ரூட் சிறப்பாக எதிர்கொண்டார். இந்த நிலையில் கோலியும் இதேபோல் ஸ்வீப் ஷாட் ஆடி இருந்தால் இந்திய அணி இங்கிலாந்து மீது பிரஷர் போட முடியும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி கேப் அணிந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் களத்திற்கு வந்து இருக்கிறார்.

களத்திற்கு வந்தார்

களத்திற்கு வந்தார்

இதின் அர்த்தம் ஸ்பின் பவுலிங்கில் கோலி ஸ்வீப் ஆட போவதில்லை என்பதாகும். ஸ்வீப் செய்யவில்லை என்பதால் கோலி இப்படி களமிறங்கி ஆடி உள்ளார். இதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஸ்வீப் மூலம் மட்டுமே இங்கிலாந்து வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

இங்கிலாந்து ஸ்பின்

இங்கிலாந்து ஸ்பின்

சென்னையில் ஸ்பின் நன்றாக இருக்கிறது. ஸ்வீப் ஷாட் மூலம் மட்டுமே இங்கிலாந்து ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ள முடியும். ஆனால் கோலி இந்த ஷாட் அடிக்கும் திட்டத்தில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, February 9, 2021, 12:43 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+