டெல்லி டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபாரம்.. 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 371 ரன்கள்
டெல்லி: டெல்லியில் உள்ள பெரோ ஷா கோட்லாவில் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்களை குவித்தது.
இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இன்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருந்தன. கே.எல்.ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷிகர் தவானும், முகமது ஷமியும் களத்தில் உள்ளனர். அதேபோல் இலங்கை அணியில் ரங்கனா ஹெராத்துக்கு பதிலாக லக்ஷன் சந்தாகன் விளையாடுகிறார். இந்த அணிக்கு கேப்டனாக இருந்து தினேஷ் சந்திமால் வழிநடத்துகிறார்.
இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்களை குவித்தது. இதில் முரளி விஜய் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோஹ்லி 156 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
முன்னதாக தவான் மற்றும் புஜாரா தலா 23 ரன்களில் அவுட்டாகினர்.


Click it and Unblock the Notifications