Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் துவக்க விழா: காதலி அனுஷ்கா ஆடியதை ரசித்துப் பார்த்த கோஹ்லி

கொல்கத்தா: ஐபிஎல் துவக்க விழாவில் தனது காதலி அனுஷ்கா சர்மா நடனம் ஆடியதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புன்னகையுடன் ரசித்துப் பார்த்தார்.

ஐபிஎல் 8வது சீசனின் துவக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

விழாவில் பலரின் கண்களும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா மீது தான் இருந்தது.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா இந்தி பட பாடல்களுக்கு ஆடி அசத்தினார். அவர் ஆடும்போது டிவி கேமராக்கள் கோஹ்லியை நோக்கி சென்றன. முதலில் நெளிந்த கோஹ்லி பின்னர் புன்னகையுடன் தனது காதலி ஆடுவதை ரசித்துப் பார்த்தார்.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

துவக்க விழாவில் கலந்து கொள்ள கோஹ்லியும், அனுஷ்காவும் ஜோடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கினர். முன்பு எல்லாம் ஜோடியாக வெளியே வராத அவர்கள் தற்போது எங்கு சென்றாலும் கை கோர்த்து செல்கிறார்கள்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடுவதற்கு பெயர்போனவர். அவர் ஆடினால் அனைவரின் கண்களும் அவர் மீது தான் இருக்கும். அத்தகையவர் ஐபிஎல் துவக்க விழாவில் சூப்பராக ஆடினார்.

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

நடிகர் பர்ஹான் அக்தரும் டான்ஸ் ஆடினார். நிகழ்ச்சியில் பர்ஹான் கூறுகையில், நான் மும்பையைச் சேர்ந்தவன். அதனால் மும்பை அணியை ஆதரிக்கிறேன். யுவராஜ் விளையாடவிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

இந்தி நடிகர் ஷாஹித் கபூரும் பல பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். அவருக்கு விரைவில் திருமணம் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

Story first published: Thursday, April 9, 2015, 17:43 [IST]
Other articles published on Apr 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+