Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசாரூதின் சாதனையை அசால்ட்டாக தூக்கிய கோலி… யாராவது இதை கவனிச்சீங்களா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

சவுதாம்ப்டன்: முன்னாள் கேப்டன் அசாரூதின் சாதனையை அசால்ட்டாக சமன் செய்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

உலக கோப்பை தொடரில் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஆடி 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர். - பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஷமி அசத்தல்

ஷமி அசத்தல்

அதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வழியாக வென்றது. போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி. ஆனால், ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப் பட்டது.

கோலி சாதனை

கோலி சாதனை

இந்த போட்டியில் கோலி யாரும் அவ்வளவு எதிர்பார்க்காத முக்கிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அவர் நேற்றைய போட்டியில் கோலி நேற்று 67 ரன்களை குவித்தார். அதன் மூலம் கடைசியாக நடந்த 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும் அரைசதம்

மேலும் அரைசதம்

அடுத்ததாக வரும் 27ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மேலும் ஒரு அரைசதம் அடிக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4அரை சதங்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இந்த தொடரில் இதுவரை கோலி சதமடிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்து வரக்கூடிய போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நின்று, சதம் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, June 23, 2019, 17:58 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+