Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்து பொந்துல எல்லாம் புகுந்து சாதனை செஞ்சுடராரு கேப்டன்... இப்ப செஞ்ச சாதனைய பாருங்க!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.

தொடரில் தொடர்ந்து இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 156 ரன்களை அடித்துள்ளார்.

Kohli equals Williamsons record with consecutive T20I fifties

இதையடுத்து கேப்டனாக டி20 தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அடித்துள்ள அரைசதங்களை நேற்றைய போட்டியின்மூலம் சமன் செய்து சாதனை மேற்கொண்டுள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய டி20 போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி 77 ரன்களை அடித்திருந்தார். இதேபோல இரண்டாவது போட்டியிலும் 73 ரன்களை அடித்திருந்தார். இரு போட்டிகளிலும் அவுட்டாகாமல் இறுதிவரை போட்டியை வழிநடத்தினார்.

இந்த டி20 தொடரில் தொடர்ந்து விராட் கோலி 2வது அரைசதத்தை அடித்துள்ளார். இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் டி20யில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி சமன் தற்போது செய்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த வடிவத்தில் கேப்டனாக 11 அரைசதங்களை அடித்துள்ளனர். முன்னதாக டி20 வடிவத்தில் அதிக ரன்கள் அதாவது 3000 ரன்களை அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையையும் விராட் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 17, 2021, 14:02 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+