Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விவசாய போராட்டம் குறித்து டிவிட் செய்தது ஏன்? நேற்று என்ன நடந்தது? சென்னையில் கோலி விளக்கம்

சென்னை: விவசாய போராட்டம் குறித்து கோலி, ரோஹித் சர்மா கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டம் குறித்து ரிஹானா, மியா கலீபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டிவிட் செய்து வரும் நிலையில், இந்த போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த பிரபலங்களின் டிவிட்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள், இந்திய விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், என்று கருத்து தெரிவித்தனர்.

கருத்து செய்தனர்

மேலும், இதில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து சொல்ல கூடாது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது உள்நாட்டு பிரச்சனை என்று கோலி உள்ளிட்டோர் டிவிட் செய்தனர். இவர்களின் டிவிட் பெரிய அளவில் சர்ச்சையாகி விமர்சனங்களை சந்தித்தது. இதனால் கோலி தற்போது சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் கோலி தனது பேட்டியில் இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் பேசுவது வழக்கம். அணியின் மீட்டிங்கில் நாங்கள் இதை பற்றி பேசுவோம். டிரெஸ்ஸிங் அறையில் இது தொடர்பான கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.

ஆலோசனை

ஆலோசனை

நாங்கள் எல்லோரும் இது பற்றி ஆலோசித்தோம். அதன்பின் இதில் என்ன கருத்தை தெரிவிக்க வேண்டுமோ அதை தெரிவித்தோம். எங்களுக்கு இதில் என்ன சொல்ல வேண்டும் என்று தோன்றியதோ அதையே கூறினோம்.

காரணம்

காரணம்

அதன்பின் நாங்கள் அணியின் மீட்டிங்கில் கவனம் செலுத்தினோம். இந்தியா - இங்கிலாந்து மேட்சிற்கான திட்டங்களை வகுத்தோம் , என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். விவசாய போராட்டம் குறித்து கோலி, ரோஹித் சர்மா கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் கோலி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Thursday, February 4, 2021, 21:28 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+