அதே கொதிப்பு, அதே சிரிப்பு .. நெருப்புடா பாடலின் கோஹ்லி வெர்ஷன் பாருங்க #HappyBirthdayVirat
டெல்லி: கபாலி திரைப்படத்தில் இடம் பெற்ற நெருப்புடா பாடல், அந்த படத்திற்கு ஒரு மாஸ் அந்தஸ்தை கொடுத்தது. அப்பாடல் பின்னணியில் இன்று 28வது பிறந்த நாளை கொண்டாடும் விராட் கோஹ்லியின் செயல்களை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் கோஹ்லியின் இந்த ரசிகர்.
இதில் பாடலில் வரும் சிரிப்பு, மகிழ்ச்சி என்ற வார்த்தை அனைத்தும் பொருந்துகிறது. எதிரணி பவுலர்களை துவம்சம் செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட்டின் 'தலைவர்' கோஹ்லிதானே என சினிமா தலைவர் ரஜினியோடு ஒப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்.
கோஹ்லி ரசிகர்களுக்கு இந்த குட்டி வீடியோ ஒரு பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Story first published: Saturday, November 5, 2016, 14:01 [IST]
Other articles published on Nov 5, 2016


Click it and Unblock the Notifications