கோலியின் தீவிர பாக். ரசிகர்…!! 18ம் நம்பர் ஜெர்சியுடன் பைக்கில் உலா…!! யார் இவர்..? வைரல் போட்டோ!!

இஸ்லாமாபாத்: பச்சை நிறத்தில் இருக்கும் 18ம் என்று எழுதப்பட்ட ஜெர்ஸியை அணிந்த படி லாகூரில் பைக்கில் செல்லும் ஒரு இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும், கேப்டனாகவும் வலம் வருபவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் குறைந்த வயதில் பல சாதனைகளை படைத்தவர். பல சாதனைகளுக்ள சொந்தக்காரர். அவருக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், குறிப்பாக வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக ரசிகர்கள்.

அண்மையில் பாக். முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டன் விழாவில் பேசினார். அப்போது, கோலியை புகழ்ந்து தள்ளினார். கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல பிட்னசிலும் சூப்பர். பாகிஸ்தானில் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பலருக்கும் கோலி தான் கனவு நாயகன் என்று அவர் புகழாரம் சூட்டினார். அவரின் இந்த பெரும் வைரலானது.

அதே நேரத்தில், விராட் 18 என்கிற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை பாகிஸ்தானில் பலரும் அணிகின்றனர். அந்த வகையில், பச்சை நிற ஜெர்ஸியை அணிந்தபடி லாகூரில் பைக்கில் ஒரு இளைஞர் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வரும் 16ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மோத உள்ள நிலையில், இந்த புகைப்படம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யாரை, யார் ஆதரிக்கிறார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் கோலியின் தீவிர விசிறியுமான உமர் ட்ராஸ் என்பவரை சொல்லலாம்.

இந்தியா, நியூசி. போட்டி ரத்தாகிறது என தகவல்...!! காரணம் இது தான் ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய அணியுடன் பாகிஸ்தான் மோதினால் தன் தாய்நாட்டை விடவும் இந்திய அணியின் வீரர் கோலியையும் இந்தியக் கொடியையுமே தூக்கிப் பிடித்து தன் ஆதரவை வெளிப்படுத்துபவர். ஒரு முறை தன் வீட்டில் கோலியின் படத்தையும் இந்திய தேசியக் கொடியையும் வைத்திருந்தார். தேசத்துரோக வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kohli fan spotted in Pakistan with 18 number jersey.
Story first published: Wednesday, June 12, 2019, 11:42 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X