
கோலியின் துவக்க காலம்
கோலி துவக்க காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. ஐந்து இன்னிங்க்ஸ் ஆடிய பின்னரே கோலி தன் முதல் அரைசதத்தை அடித்தார். தன் துவக்க காலத்தில் பெரியளவில் ரன் குவிக்கவில்லை கோலி. 2012இல் தன் ஆறாவது டெஸ்டை ஆஸ்திரேலியாவில் ஆடினார் கோலி.
மஞ்ச்ரேக்கர் போட்ட ட்வீட்
அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியில் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். "விவிஎஸ்-ஐ நீக்கிவிட்டு, ரோஹித் சர்மாவை அடுத்த டெஸ்டில் ஆடவைக்கலாம். நீண்ட கால அடிப்படையில் இது உதவும். விராட்-க்கு இன்னும் ஒரு டெஸ்ட் கொடுக்கலாம். அதுவும் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு சரி வர மாட்டார் என்பதை தெரிந்து கொள்ள தான்" என கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தது அந்த ட்வீட்.

கோலி தற்போதைய பார்ம்
கோலி அதன் பின் ஒருநாள் அணிக்கு முன்பே டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார். பின்னர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து ரன் குவித்து எராளமான பேட்டிங் சாதனைகளை தவிடு பொடியாக்கிய அவரது பேட்டிங் சராசரி 50க்கும் மேல். தற்போது நம்பர் 1 டெஸ்ட் வீரராக இருக்கிறார்.
திட்டு விடும் ரசிகர்கள்
இந்த நிலையில், கோலி ரசிகர்கள் சஞ்சய் ஆறு வருடம் முன்பு போட்ட ட்வீட்டை தேடி எடுத்து அவரை திட்டி வருகிறார்கள். ஒருவர், "சஞ்சய் மஞ்ச்ரேக்கரை போல வேறு யாருடைய கணிப்பும் அதிகளவில் தவறாக சென்று நான் பார்த்ததில்லை. அப்புறமும் ஏன் தொலைக்காட்சிகள் அவர் பின்னே ஓடுகின்றன" என அவரது திறமையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications