அனுஷ்கா சர்மா ஜாக்கிரதை.. கோஹ்லியை காதலித்த பெண்ணை எச்சரித்த ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

Posted By:

மும்பை: இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார். கிரிக்கெட் போட்டி ஒன்றிற்காகவும், சில தனியார் நிகழ்ச்சிகளுக்காகவும் அவர் இந்தியா வந்துள்ளார்.

இங்கிலாந்து பெண்கள் அணியில் விளையாடும் 'டேனியல்லே வியாட்' என்ற அந்த வீராங்கனை கோஹ்லியை பல காலமாக காதலித்து வந்தார். இந்த விஷயம் இணையம் முழுக்க வைரலாக இருந்தது.

கோஹ்லி அனுஷ்கா திருமணம் குறித்து கூட அவர் பேசி இருந்தார். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்து இருந்தார்.

கோஹ்லி லவ்

டேனியல்லே வியாட் என்ற இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை கோஹ்லியை காதலித்து வந்தார். ஒருநாள் டிவிட்டரில் வெளிப்படையாக ''கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று கேட்டு இருந்தார். இந்த டிவிட் வைரல் ஆகி இருந்தது.

இந்தியா வந்தார்

கோஹ்லிக்கு திருமணம் ஆன பின் முதல்முறையாக டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் மும்பையை சுற்றிப்பார்த்து போட்டோ வெளியிட்டார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரல் ஆனது.

கொஞ்ச தூரம்தான்

இவரது டிவிட்டுக்கு விராட் கோஹ்லி ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார். அதில் ''நீங்கள் விராட் கோஹ்லி வீட்டில் இருந்து 12 கிமீ தொலைவில்தான் உள்ளீர்கள்'' என்று கூகுள் மேப் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பாத்து பத்தரம்

இவர் ''அனுஷ்கா சர்மா ஜாக்கிரதை. பத்தரமா இருங்க டேனியல்லே வியாட்'' என்று டிவிட் செய்து இருக்கிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
England Women's team cricketer Danielle Wyatt, who became headlines all over the world for her tweet as 'Kholi marry me!!!' Kohli Fans warns Danielle Wyatt after her Mumbai Visit.
Story first published: Friday, March 23, 2018, 12:07 [IST]
Other articles published on Mar 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற