For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடுவரை நோக்கி பேட்டை காண்பித்த கோஹ்லி.. ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி

By Veera Kumar

டாக்கா: ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் விராட் கோஹ்லிக்கு 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐ.சி.சி.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்கதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது.

Kohli fined for dissent after dismissal

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இறுதியில் இந்திய அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் விராட் கோஹ்லி, முகமது சமி, எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். இந்த முடிவை நடுவர் எடுக்கும் முன்பாக பேட்டை உயர்த்தி காண்பித்து பந்து பட்டது.. பந்து பட்டது.. என்பதை போல கோஹ்லி முறையிட்டார். உண்மையில், பந்து பேட்டில்பட்டு அதன்பிறகே, கால் காப்பில் பட்டது. எனவேதான் கோஹ்லி அவ்வாறு கூறினார்.

இருப்பினும் நடுவர் அவுட் கொடுத்தார். இதையடுத்து, அட போங்கய்யா... என்பதை போல கையை விரித்து காட்டினார் கோஹ்லி. இவ்வாறு நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக விராட் கோஹ்லிக்கு போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதமாக விதித்து ஐ.சி.சி, உத்தரவிட்டுள்ளது.

Story first published: Monday, February 29, 2016, 9:03 [IST]
Other articles published on Feb 29, 2016
English summary
Virat Kohli has been fined 30% of his match fee for violating the ICC Code of Conduct by showing dissent after he was given out in the Asia Cup game against Pakistan in Mirpur.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+