For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை மன்னிச்சுருங்க.. தயவுசெஞ்சு எனக்கு தடை போட்றாதீங்க.. கோலி யாரிடம் இப்படி கெஞ்சினார் தெரியுமா?

Recommended Video

சிட்னி டெஸ்ட் சர்ச்சை பற்றி விவரமாக கூறும் கோஹ்லி- வீடியோ

லண்டன் : விஸ்டன் கிரிக்கெட் பத்திரிக்கையில் அளித்துள்ள பேட்டியில், கோலி தன் சிட்னி டெஸ்ட் சர்ச்சை பற்றி பேசியுள்ளார். அப்போது என்ன நடந்தது என்பதை பற்றியும் விவரித்துள்ளார்.

கோலி துவக்கம் முதல் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதில் சிட்னி டெஸ்டில் அவர் செய்த காரியம் மிகவும் வெளிப்படையாக நடந்ததால் பெரிய பிரச்சனை ஆனது.

2012 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரண்டாம் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் பவுண்டரி எல்லை அருகே நின்று இருந்த கோலியைப் பார்த்து திட்டி இருக்கிறார்கள். அதற்கு கோலி, தன் நடுவிரலை காட்டினார்.

ரெப்ரீ ஆதாரத்தோடு விசாரணை

ரெப்ரீ ஆதாரத்தோடு விசாரணை

அடுத்த நாள் என்ன நடந்தது என கோலி தெரிவித்தார். "மேட்ச் ரெப்ரீ ரஞ்சன் மடுகுலே என்னை அழைத்தார். நான் "என்ன பிரச்சனை?" என்பது போல போய் நின்றேன். அவர், "நேற்று பவுண்டரி கோட்டுக்கருகில் என்ன நடந்தது?" என கேட்டார். நான், "ஒன்றும் இல்லை" என கூறினேன். அவர் என் முன் ஒரு செய்தித்தாளை வீசினார். அதில் நான் விரலை காட்டும் பெரிய படம் ஒன்று வெளியாகி இருந்தது" என்றார்.

மன்னிப்பு கேட்ட கோலி

மன்னிப்பு கேட்ட கோலி

தொடர்ந்து இந்த சம்பவத்தை விவரித்தார் கோலி. "அப்போது நான் "என்னை மன்னித்து விடுங்கள். என்னை தடை செய்து விடாதீர்கள்" என அவரிடம் கேட்டேன். அதில் இருந்து நான் தப்பித்து விட்டேன். அவர் மிகவும் நல்லவர். நான் இளமை காலத்தில் இருக்கிறேன். இது போன்ற விஷயங்கள் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டார்" என்றார் கோலி.

கோச் ராஜ்குமார் சர்மா பற்றி

கோச் ராஜ்குமார் சர்மா பற்றி

கோலி தன் சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா பற்றியும் கூறியுள்ளார். "என் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா என்னை நிறைய புரிந்து கொண்டார். என் குடும்பத்திற்கு பிறகு நான் அதிகம் பழகியது அவரிடம் தான். அவரை பார்த்து மட்டும் தான் நான் மிகவும் பயப்படுவேன்" என கூறியுள்ளார் கோலி.

இளம் வீரர்களுக்கு உதவ நினைப்பேன்

இளம் வீரர்களுக்கு உதவ நினைப்பேன்

"நான் மற்ற வீரர்கள் தவறு செய்து, அதை என்னால் திருத்த முடியவில்லை என்றால் அது என் தோல்வி என நினைப்பேன். நான் அமைதியாக இருந்தால் என் வேலையே செய்யவில்லை என அர்த்தம். நான் இளமையில் செய்த தவறுகளை, மற்ற இளம் வீரர்கள் செய்யாமல் பார்த்துக் கொண்டால், அவர்கள் வாழ்வில் முக்கியமான காலத்தை அவர்கள் வீணாக்க வேண்டியதில்லை" என கூறியுள்ளார் கோலி.

Story first published: Wednesday, September 5, 2018, 14:06 [IST]
Other articles published on Sep 5, 2018
English summary
Kohli flickering the finger controversy during 2012 Sydney test explained by him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X